பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/429

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
393


செல்வராகச் சிறந்த காந்தள் சான்றோரை மதிக்கும் மலராக் வும் பண்புடையதாகவும் பேசப்பட்டது. காந்தள் தேனில் ஆர்வங்கொண்ட வண்டு அது மலரும் வரை காத்திராது கிண்டி மலரச் செய்யும். அந்நிலையில் காந்தளும் தான் மலர்ந்துகொடுப்பது தனது கடன்' என்று கருதி மலர்ந்த தாம். பண்புடையோர் பழங்காலம்முதல் தாம் அறிந்திருந்த செம்மை நிறைந்த சான்றோர் என்று தமது இல்லத்திற்குத் தாமே வரின் அவரை முகம் மலர்ந்து காட்டி வரவேற்பர்; இடந்தருவர்; விருந்தளிப்பர். இவ்வாறு செய்வதைத் தமது கடமையாகக் கொள்வர். இவரை உவமையாக்கிக் கருவூர்க் கதப்பிள்ளை என்பார், காந்தளம் கொழுமுகை காவல் செல்லாது வண்டுவாய் திறக்கும் பொழுதில் பண்டும் தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட கடனறி மாக்கள் போல இடன்விட்டு இதழ்தளை அவிழ்ந்த து என்று சிறப்பித்தார். இவ்வாற்றால், பொது பெயர் கொண்ட காந்தட் பூ, சிறப்பாக மலை நிலத்துப் பூப்பெயருக்குரியது. தலைகீழ் மலர்ச்சியுடையது. இதழ், பசுமை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு என அடியிலிருந்து பெற்று மலர்ச்சி நிறைவில் பெரும்பகுதி செம்மை நிறங்காட்டுவது. மணமுள்ளது. பலவகையினராலும் சூடப்படுவது. முருகனுக்குரியது. சுவைத்தேன் கொண்டது. - என்றமைகின்றது. தோன்றியுடனும் கோடலுடனும் பொருத்திப் பார்த்தால், தோன்றி : தோன்றியும் செம்மை; காந்தளும் செம்மை. - 1 குறு : 265 , 1-3.