பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7

$ இவ்வா , நனையாக, அரும்பாக, முகிழாக, மொக்காக, மொட்டாக, போதாக, பொகுட்டாக, பூவின் தரமாகப் பூத்தது மலை. உலகில் உயர்ந்தது இமயமலை. முதன் முதலில் தோன்றிய மலை என்பர். வெண்மையான பனி படர்ந்ததால் பனிமலை-இமம் மலை (இமம்=பனி) எனப்பட்டது. சேக்கிழார் இவ்வெண்மைத் தோற்றத்தோடு மனக்கண்ணில் காண்கிறார். உவமை வாயிலாகச் சிறப்பிக்கின்றவர், 'உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல் மலரும் வெண் மலர் போல் வதம் மால்வரை’’17 -என வெண்டாமரை மலராகப் பாடுகின்றார். உலகம் என்னும் கொடி மேல் மலர்ந்த நீர்ப் பூவாகக் கண்டு மகிழ்கின்றார். リ》 _ウ Yo ، في பூத்துமலர்ந்த மலையின் புறவிதழாக அகவிதழாக, ஞாலமும் நிலமும் விரிந்தன. இதழ்கள் விரிந்தால் மனங்கமழ வேண்டும் அன்ருே?கமழ்ந்தது. மலைஎன்னும் பூவினது இதழாம் மலையடிவார ஞாலம் மணம் பெற்றதைத் தமிழ்ப் பண்களில் தேர்ந்த பரிபாடல் என்னும் வண்டு, 'மாமலை ஞாறிய (மணத்த) ஞாவம்'18 -என இசைக் கின்றது. மதுரைக் காஞ்சி என்னும் பத்துப் பாடலில் ஒரு பாடலாகப் பாடும் தேன் வண்டு, ‘தேன்துரங்கும் உயர்சிமை ய மலைநாறிய வியன் ஞாலம்’ -எனத் தேனையும் கூட்டி மணம் பெற்ற ஞாலமாகக் கமழ வைக்கின்றது. . . இவ்வாறு, மணங்கமழும் சூழலால் மலை என்னும் பூவில் பரவிய தாதுக்களின் சேர்க்கையால் ஒரறி உயிர் முதல் ஆறறி உயிர்கள் பிறந்து பெருகின. இவ்வுயிர்கள் வைகும் நிலம் விரிந்த வையத்தை நலங்கிள்ளி என்னும் மன்னன், - 'நிலமவர் வையத்து வலமுறை வளை இ’’2 பி 一6了āT வையத்தை மலராக-நிலமென்னும் மலராகக் காண்கின்றான். 17 பெரிய : திருமலைச் சிறப்பு : 3 19 மது, கா : 3, 4 . . 20 புறம் 225 : 4