பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394


இரண்டும் மேல்நோக்கிய வளர்ச்சியுடையவை. காந்தள் சற்றுப் பெரிதாக வளப்பமானது. காந்தளின் காம்பு நீள் துடுப்பு எனப்படும். தோன்றிக் காம்பு சிறியதாகத் துடுப்பு எனப்படாது. கோடல்: கோடல் வெண்மை; காந்தள் செம்மை. இரண்டின் காம்பும் துடுப்பு எனப்படும். இரண்டிற்கும் மருப்பும் பாம்பும் உடைவளையும் உவமையாகும். மூன்றும் ஒரே அமைப்பில் தத்தம் நிற வளர்ச்சியில் நிறம் மாறு பவை. 签 முன்றின் பொதுமை: மூலத்தால் குறிஞ்சி தொல்காப்பியத்தில் 'தெய்வ உணாவே' (பொருள் :18, என்னும் நூற்பா அகத்திணைகளின் கருப்பொருள்களைக் குறிப்பது. இதன் உரையாசிரியர் யாவரும் குறிஞ்சித் தினைப் பூவாக வேங்கை, குறிஞ்சி, காந்தள் எனக் காந்தளை யும் குறித்தனர். பேராசிரியர் தம் திருச்சிற்றம்பலக் கோவை உரையிலும்

காந்தள் குறிஞ்சி நிலத்துப் பூ" பைங்காந்தள் என்று குறிஞ்சிக்குரிய பூவிலே முடித்த

,:1 எனக் காந்தளுக்குக் குறிஞ்சி நிலத்தைச் சொன்னார். பின்னர் தோன்றிய அகப்பொருள் விளக்கமும், ... ...வேங்கை குறிஞ்சி காந்தள் ......குறிஞ்சிக் கருப்பொருளே" (20 : 5, 12) -என்றது. பிற இலக்கண நூல்களும் இவ்வாறே குறித்தன. l திருக்கோ : 1 உரை