பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/432

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
396

காலத்தால் மழை இப் பூ முல்லை, பிடவம் முதலிய கார்காலப் பூக்களோடு சேர்த்துப் பேசப்படுவது. தனியாகவும், r காந்தள் : "கார்க்காந்தள் முகை வென்ற விரல்' - (யாப். வி : மேற்கோள்) "...............நெறிமுகைக் காந்தள் கார் மலிந் தன்று” (பரி : 14 13, 17) கோடல் : "தண்ணறுங்கோடல் துடுப்பெடுப்பக் கார் எதிரி விண்ணுயர் வானத் துறுமுரற்ற” (ஐந் : எழு 17) "பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தெனப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்” (நெடுநல் : 2, 5) தோன்றி : "...... மென்தகைத் தோன்றி . பவழத் தன்ன செம்பூத் தாஅய்க் கார்மனந் தன்று குன்று” (பரி : 14 15-11) -எனப்பட்டது இவ்வாறெல்லாம் காந்தளை அதன் வகைகளுடன் கார் காலப் பூவாகக் காண்கின்றோம். பருவமல்லாத காலத்தில் பெய்யும் வம்ப மாரியைக் கண்டு உண்மையில் கார்காலம் வந்ததாகக் கருதி மலரும் மலர்களில் இப்பூவும் இடம் பெற்றது. "காரென் றயர்ந்த உள்ளமொடு தேர்வில் பிடவும் கொன்றையும் கோடலும் یہ ہے . ۔ மடவ வாகலின் மலர்ந்தன பலவே' -எனக் காந்தளும் வம்பமாரிக்கு மலர்ந்து தன் மடமையைக் காட்டியது .இதனாலும் கார் கால மலர் என்றுணரப்படும். - 函 இப் £b ஆடித்திங்களில் பூக்கத் தொடங்கி மார்கழி ಖಣT பூக்கும். கார்காலத்தில் பூக்கத் தொடங்கி முன் பனிப் பருவம் 1. தர், 99 : 8.10