பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

397


வரை தொடர்ந்து பூக்கும். ஒராண்டில் இஃதொரு பாட்டம் முன் பனிப் பருவமாகிய அற்சிரத்திலும் இப்பூ காணப்படுவதால், "... - ... ... ... காந்தள் நீடிதழ் நெடுந்துடுப்பு ஒசியத் தண்ணென வாடை துரக்கும் வருபனி அற்சிரம்" என முன்பனிக் கால வாடைக்காற்றால் இப்பூ ஒசிந்ததைக் காட்டினார் நக்கீரனார்’ இருப்பினும் இது கார்காலப் பூவே. அகல் விளக்கைப்போல மலர்ந்தது என்றும், சுடர்விட்டது என்றும் குறிக்கப்படுவதால் இது அந்திப்பொழுதில் மலரும் பூ. மாலையில் மலரும் முல்லையுடன் மலர்ந்ததாகப் பாடப்பட்டுள்ள மையும் இது அந்தி நேரப் பூ என்று அறியலாம். உண்மை நிலை யும் இஃதேயாக உள்ளது. அந்தியில் மலரும் இப் பூ மறுநாள் காலையிலும் தன் மலர்ச்சியைத் தொடரும். மறுநாள் மாலையளவில் தன் முழு வளர்ச் சியை எட்டுகின்றது. தன் தன் முற்றிய முழு நிறத்தையும் மறுநாள் அளவில் பெறுகின்றது. எனவே இப் பூ செடியில் மூன்று நாள் களுக்குக் குறையாமல் மலர்ந்து நிற்பதைக் காண்கின்றோம். இதுவரை கண்ட யாவற்றையும் தொகுத்தால், காந்தள், கொடிப் பூ. இலை முனையில் பற்றிப் படரும் சுருள் நரம்புகொண்டது. குறிஞ்சி நிலப்பூ. கார்காலப் பூ. அந்தியில் மலரும் பூ. நீண்ட காம்பைக் கொண்டது. தலைகீழ் மலர்ச்சியுடையது. ஆறு இதழ்களைக் கொண்டது. பசுமை, வெண்மை, மஞ்சள், செம்மை எனவும் பசுமை, மஞ்சள், கிச்சிலி செம்மை எனவும் வண்ணப் படிகளைக்கொண்டது. 1 ഷsi ; 18 8-10,