பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398


நிறம் மாறி முற்றுவது. காந்தள், கோடல், தோன்றி எனமூன்று வகையினது. கவர்ச்சியான எழில்கொண்டது. புலவர் பலரால் பாடப்பெற்றது. பல உவமைகளுக்குக் களமானது. நிறைவான இலக்கிய மலர். பரவலாக இலக்கியங்களில் மலர்ந்து படிப்போரை உவப் பிப்பது இப்பூ. அருகியதாக இக்காலத்திலும்பூத்துக் காண்போரது கண்களைக் குளிர்வித்து உள்ளத்தையும் உவப்பித்து வருவது, இதனை உணர்ந்த செடியியலார் இதற்குப் பேருவப்பை ஊட்டும் தனிச்சிறப்புடையது' என்று பொருள்படும் GLORIOSA, SUPERBA என்னும் பெயரைச் சூட்டினர். மலைப்பாங்கில் இப் பூவைக் காணும் போது உண்மையாகவே நம்ம்ையும் அறியாமல் பேருவப்பைக் கொள்கின்றோம். முன்னே குறிக்கப்பட்ட இதன் ஆங்கிலப் பெயரும் இதன் பெருமையையும் தூய்மையையும் காட்டி யதைக் கண்டோம். காந்களைப்பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் காணப்பட்ட கருத்துகளுக்கு ஒரு முத்திரை குத்தவேண்டும். இங்கு இவ் ஆய்வு இலக்கியப் போக்கில்தான் அமைக்கப் பட்டுள்ளது. இவ்வமைப்பும் மரபும் இலக்கியச் சான்று ஒன்றைக் கொண்டே எடுக்கப்பட்டன அல்ல. இலக்கியத் கருத்துகளைத் தொகுத்துக் கண்டபோது குழப்பமே மிகுந்தது. ‘காந்தள் மூன்றா; ஒன்றா? கோடலுக்குந் தோன்றிக்கும் வேறுபாடுகள் யாவை? காந்தள் தனி ஒன்றாகவும் உள்ளதா? - என்னும் சிக்கலான வினாக்கள் எழுந்தன. எழுந்த குழப்பத்தையும் சிக்கலை யும் போக்கிக்கொள்ள இப்பூவை நேரில் கண்டு ஆராய வேண்டிய தாயிற்று. ஒரு பயணத்தை மேற்கொண்டேன். - மலைஞாலத்து மலையில் குமிழி, தேக்கடி, கோட்டயம் பகுதிகளிலும் அதன் மலைச்சாரல் காடுகளிலும் காந்தள் மலர்ப் பரப்பைக் கண்டும், கூர்ந்து ஆய்ந்தும் வகைகளுக்கான அடையாளங்களைக் காண முடிந்தது. நாகப்பட்டினம் பகுதியில் பரவை என்னும் சிற்றுாரின் கடற்கரை மணல்மேட்டில் கார் காலத்தில் பூக்கும் காந்தளை அவ்வப்போது கண்டு ஆய்ந்ததும் பயனளித்தது. . . . . . . . . .