பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400


2. புலி மலர் வேங்கைப் பூ மேம்பாட்டு மரம் மேம்பட்ட அறிமுக மலர்களில் மேலோங்கித் தோன்றுவது வேங்கைப் பூ. ஆம், ஒங்கி வளர்ந்துள்ளதால் மலைக்கு ஒங்கல் என்று பெயர். ஓங்கல் மேலும் ஓங்கி வளர்வது வேங்கை மரம். மலைமேல் பெருமரமாக வளர்ந்துவானளாவிப் பரவித்தோன்றுவது இம்மரம். இதனை, உயர்வு நவிற்சியாகக் கொங்கு வேளிர், 'இமையோர் உலகுக்கு ஏணி யாகிய காண வேங்கைக் கவர்சினை" -என்று "மேல் உலகத்திற்கு ஏணி’ என்றார். - புறநானூற்றிலும், "ஓங்குநிலை வேங்கை” யாகக் (புறம் : 265 : 2) காண் கின்றோம். இம்மரம்வானளாவி வளர்ந்துஓங்கிய நிலைகொண்டது. "ஓங்கு நிலை என்னும் அடைமொழி காட்சியளவில் ஓங்கி உயர்ந்து வளர்வதையும் குறிக்கும்; கருத்தளவில் ஓங்கி உயர்வதை யும் குறிக்கும். ... " பெருங்குன்றும் கிழார் என்னும் புலவர் தம்மை 'ஓங்கு நிலைப்பரிசிலேன்' என அறிமுகப்படுத்திக்கொண்டார். இதற்கு "உயர்ந்த நிலைமையை உடைய பரிசிலேனாகிய யான்' என்று உரை வகுக்கப்பட்டது. எனவே, வேங்கையும் கருத்தளவிலும் காந்தளுக்குச் சமமான இலக்கியச் சிறப்பு பெற்றதாகும். இம்மரம் உயரமாகவும், கிளைகள் கவடு விட்டுப் பக்கத்தில் பரவியும் தழைகள் தணிந்தும் பரவி நிற்கும். இதில், வேங்கை, உதிர வேங்கை, உரோம வேங்கை, மணிமுத்து வேங்கை எனப் பிற்காலத்தார் மருந்து வகைக் கேற்பவும், பிறவற்றிற்குமாக வகைப்படுத்தினர். இப்பெயர்களுள் உரோம வேங்கை என்பது மயிர் செறிந்த வேங்கைப் புலியைக் குறிப்பதாகலாம். இதன் மறுபெயர்களாகச் சேந்தன் திவாகரம், 1 பெருங் வத்தவம் : 3 : 8ே, 69 ն պքն : 211 : 1,