பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

417


"கருங்கால் வேங்கை இறுஞ்சினைப் பொங்கர் நறும்புக் கொய்யும் பூசல்' எனவும் பூசலாயிற்று. "இன்னா இசைய பூசல் பயிற்ற' என்றும், "புலி புலி என்னும் பூசல் 3 என்றும் பூசலாகக் குறிக் கப்படும். 'நசல்' என்றால் ஆரவாரமான கூச்சல்' என்று பொருள். மாறு பட்ட போர் இரைச்சலையும் குறிக்கும். இங்கும் புலி' என்னும் பொய்யான மாறுபாடு இருப்பதாலும் இது பொருந்தும். ஆனால் இக் கூச்சல் ஒரு பாதுகாப்புக்கும் உதவிக்கும் அழைப்பது போன்றுள்ளதால் பாதுகாப்புக்குரிய கூச்சல்' என்னும் பொருளில் "ஏமப் பூசல்" எனப்படும். 'தலைநாட் பூத்த பொன்னினர் வேங்கை மலைமார் இடு உம் ஏமப் பூசல்' கி - என்றார் பெருங் கெளசிகனார். இக் குறும்பு வேலையை இளஞ்சிறாரும் செய் வர். கன்றுகளை மேயவிட்ட இளஞ்சிறார் பரந்த வேங்கை மரத் தடியில் விளையாடுவர். வேங்கை அரும்பும் காலத்தில் அவர்கள் ஆர்வம் பூவின்மேல் விழும். கொத்தாக ஒளிரும் பூங்கொத்தைப் பறித்துச் சூடி விளையாட ஆர்வம் எழுவது இயற்கை. இவர் களால் ஏற முடியாது. ஏற முடியாத நிலையில் மகளிர் கையாளும் முறையைக் கையாள்வர். 'மன்ற வேங்கை மலர்பதம் நோக்கி ஏறாது இட்ட ஏமப் பூசல்" கேட்டு ஆடவர் ஓடிவந்து உண்மையறிந்து பறித்துக் கொடுப்பர். இவ் ஏமப் பூசல் மற்றொன்றிற்கும் உதவியாயிற்று. பூக் களைக் கொய்ய இளங்குமரிகள் புவி புலி’ என்று ஏமப் பூசலிடு வர். அப்பக்கமாக வரும் கட்டிளங்காளை உதவிக்கு ஒடிவருவான் 1 மது : 296 2 அகம் : 52 : 4, 8 அகம் : 48 ; 7. 4 மலை : :05, 5 குறுந் , 241 : 4, 5, 崇27