பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

419


'நாள்வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ, கேரள் வேங்கை அன்னான் குறிப்பு'T -என்றும் பாடல்களில் அமைத்தனர். "பூத்த வேங்கை' , 'பூவா வேங்கை' -எனப் பூவாலும் i. 'பாயும் வேங்கை' , 'பாயா வேங்கை'- எனப்பாய்வாலும் வேறுபடுத்தினர். இவ்வடை மொழிகளால் மரம், விலங்கு எனப் பொருள் வெளிப்படுவதால் இதற்கு 'வெளிப்படை' என்றொரு இலக்கண அமைப்பும் அமைந்தது. மரமா விலங்கா? ஒர் ஐயம் எழலாம். வேங்கை என்னும் சொல் முதலில் மரத்திற்கு அமைந்ததா? விலங்குக்கு அமைந்ததா? சங்க இலக்கியங்களில் மர வேங்கைக்கு மிகுதியான ஆட்சி உள்ளது. பொதுவில் இச்சொல் சங்க இலக்கிய அளவில் 158 இடங்களில் ஆளப்பட்டுள்ளது. இவற்றில் 141 இடங்களில் மர வேங்கையைக் குறிக்க வந் துள்ளது. 17 இடங்களில் விலங்கைக் குறிக்கின்றது. விலங்கைக் குறிக்கும் இடங்களிலும் சில இடங்களில் "கொடுவரி வேங்கை' என்றும் வாள்வரி வேங்கை என்றும் அடை மொழி பெற்றே குறிக்கப்படுகின்றது மரமும் விலங்கும் அடுத் தடுத்து வரும் இடங்களில் ஒரிடம் தவிர மற்றெங்கும் புலி' என்னும் சொல்லே விலங்குக்குக் குறிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் வர வர வேங்கை மரம், பூ பற்றிய ஆட்சி இலக்கியங்களில் குறைந்து கொண்டே வந்துள்ளது. தற்காலத் தில் இடமே அற்றுப் போயிற்று. அருகிவரும் இடைக்காலப் பிற்கால நூல்களிலும் வேங்கைப் புலி புலி வேங்கை' என்றும், வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி' என்றும் புலி என்னும் சொல்லும் இணைந்தே நிற்பதைக் காணலாம். மேலும், சங்க இலக்கியங்களில் கானும் ஏமப் பூசலில் ‘புலி புலி' என்றுதான் பூசலிடப்பட்டது. வேங்கை வேங்கை' 1 திணை: து : 31 : 3, 4 وإ: 15 : لي من 2 کيه