பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/442

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
422


"கருங்கால் வேங்கை விபுகு துறு கல் இரும்புலிக் குருளையில் தோன்று' மாம். கல்லும் வேங்கையால் இவ்வாறு புவியாகத்தோற்றமளித்தது; புலிக்கு உவமையாகவும் அமைந்தது. ஒரு புலிக்குட்டி தாய்ப் புலிக்குப் பக்கத்தே கிடந்தது. அக்குட்டி வேங்கைப் பூங்கொத் துடன் கூடிய தழைக்கொத்து போன்று இருந்ததைச் செழியனார் பாடினார். ஒரு குட்டி மட்டுமன்று, இதோ மூன்று குட்டிகள் தனித் தனியே கிடக்கின்றன. இன்னும் மயிர் காணவில்லை. தோல் மூடிய இறைச்சித் துண்டுகள்போல் தனித்தனியே கிடக்கின்றன. இதனை, வேங்கைத் தழைக்கொத்துகள் மூன்றுசிறு சிறு பூங் கொத்துக்களுடன் தனித்தனியே கிடப்பன போன்றிருந்தது என்றார் அவ்வையார். 3 பாட்டியும் அச்சமில்லாது எங்கிருந்தோ புலிக்குட்டிகளை, அதிலும் குகை முடுக்குக்குள்ளே கிடந்த வற்றைப் பார்த்திருக்கிறார். வேங்கைப்புலி, வேங்கை மரமாகியதையும் காண்கின்றோம். வண்டு ஒன்று வேங்கைப் பூவின் தேனை உண்ண ஆர்வங் கொண்டது. பறந்து வந்த வழியில் ஒரு வரிப்புலி படுத்திருந்தது. அதன் தோற்றம் அதற்குப் பூத்த வேங்கைக் கிளையாகத் தோன்றிற்று. வண்டு, வேங்கையஞ் சினையென விறற்புலி' யைச் சுற்றியது. வலிமை வாய்ந்த ஆண் புலி ஒன்று. மதம்பொழியும் யானை ஒன்றை எதிர்த்தது. அதன் அழகிய முகத்திற் பாய்ந்து தாக்கிற்று. தாக்குதலை ஏற்ற யானை தன் வெள்ளிய கோட்டால் புலியின் உடலில் குத்தியது. அதன் மருப்பு குருதிக்கறையாகச் சிவந்தது. குத்துப்பட்ட புலி பின்வாங்கிவந்து குகையிற் சோர்ந்து கிடந்தது. வாடிக்கிடந்த புலியை ஈழத்துப் பூதன் தேவனார் என்னும் புலவர், - . 1 குறு 47 : 1, 2 8 அகக் : 147 , 1-4 2 தத் 8ே8 : 1, 2 4. கலி : 46, 5