பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/443

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
423


'கோடைக்கால வெப்பத்தால் உலர்ந்து காய்ந்து வாடிய வேங்கையின் கிளைபோலக் கிடந்தது (புலி)”* -என்றார். புலி இவ்வாறு உருவத் தோற்றத்தால் வேங்கையானது போன்று உறுமும் ஒலியாலும் வேங்கையோடு தொடர்புடைய தாகப் பாடினார் மாங்குடி மருதனார். முன் கண்ட ஏமப் பூசல் ஆரவாரமாக எழுமன்றோ? இவ் ஆரவார முழக்கம் போன்று களிறு ஒன்றைத் தாக்கி முழங்கிய புலியின் முழக்கம் இருந்ததாம். 2 மரத்தைக் குத்தம் மதயானை யானைக்கும் புலிக்கும் பிறவிப் பகை. ஒன்றையொன்று நினைந்தாலே தாக்க எழும். ஒரு யானை. "புதுவதாக மலர்ந்த வேங்கையை அதுவென (புலியென) உணர்ந்து அதன் அணிநலம் முறுக்கிய'3 தாம். களிறு அம்பால் அடிபட்டபின்னர் ஊக்கங்கொண்டெழுந்து தன் வலிமையை நிலைநாட்டும்' என்றார் திருவள்ளுவர் இது களிற்றின் இயற்கைத் தன்மை. புலியால் தாக்கப்பட்ட யானை அப் புலியைத் தேடியும் அலையும். எப் புலியானாலும் தாக்கும். புலி போன்று தோன்றும் எதையும் தாக்கும். தாக்கப் புலியைத் தேடி அலைந்த களிறு ஒன்று பூத்த வேங்கை மரத்தைப் பார்த்தது. பூங்கொத்தோடு தோன்றும் அதன் கிளை, மரத்தின் மேல் புலி ஏறி இருப்பது போன்று பட்டது. சினம் முற்றிய களிறு வேங்கை * யின் அடிமரத்தில் கோட்டால் குத்தியது. பச்சை மரத்தில் பாய்ந்த மருப்பை இழுக்க முடியாமல் கத்தியதை நல்லந்துவனார் பாடியுள்ளார்.? 1 குறுந் : 843 : 2-6, 2. மது. கா : 296-298 8 கலி : 49 : 1, 6 4. புதையம்பிற் பட்டுப் பாடுன்றுங் களிறு' --குறள் : 597 5 saff : 88 : 6–8