பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/444

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
424


இதுபோன்று வேங்கை மரத்தைப் புலியாகக் கருதிய ஒரு யானை வேங்கை மரத்தையே தாக்கியது பூவுடன் கூடிய பெருங் கிளையைத் தும்பிக்கையால் முறித்தது. முறித்ததைப் பிளந்தது. பிளந்ததைப் பூங்கொத்துடன் தனது மிகப்பெருந்தலையில் சார்த்திக்கொண்டது. ஒரு பிளிறலுடன் வீர நடைபோட்டது. இந்நடையையும் தலையில் சார்த்திய வேங்கைக் கிளையையும் இணைத்து, பகைப்புலத்தைத் தாக்கப் புறப்பட்ட படை வீரர் தண்டு என்னும் போர்க்கருவியை (கதை என்னும் படை) தோளில் ஏந்தி வீர நடைபோட்டது போன்று இருந் தது' எனப் பரணர் பாடல் காட்டுகின்றது. உணவு வேங்கை புலிப் பகையாக வேங்கையுடன் தொடர்புகொண்ட யானைக்கு வேங்கை ஒர் உணவு விடுதியாயிற்று. வேங்கைப் பூவையும் தழையையும் யானை உணவாகக் கொள்ளும். சிவந்த பூங்கொத்தை அது உணவாகக் கொள்வதை நெருப்பைப் போன்ற உணவுருண்டை (கவளம்) என்றனர். - " ...............கருங்கால் வேங்கை எரிமருள் கவளம் மாந்திக் களிறு தன் தும்பிக்கையைத் தன் நெற்றியில் உயர்த்தி நீட்டி நின்றது. நுதலில் கிடந்த கை, கல்லின்மேல்.ஊரும் பாம்புபோல் தோன்றியதாம். இது மாமூலனார் எழுத்தோட்டம். w 'யானை வேங்கைப்பூவைத் தான்.உண்ணுவதுமட்டுமன்று; 'தன் கன்றோடு இளமையான பெண் யானையையும் தும்பிக்கையால் தழுவி அழைத்துச் சென்று, வேங்கை யின் பெரிய கிளையை முறித்து, அதிலுள்ள பொன் போன்ற பூங்கொத்தைக் கவளமாக ஊட்டும். இது பாலை பாடிய பெருங்கருங்கோ கருத்தோட்டம், - 1 பதிற்று : 41 7-19 8 தற் 202 8.6. 3 அகம் : 349:10-14 -