பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426


திலமைந்த வேங்கைப் பூப்போன்ற புள்ளிகளையும் சுற்றியதாம். ஆனால், நிகண்டுகள், * : "சண்பகமும் வேங்கையும் வண்டு உனா மலர்' - என் கின்றன. பிற்கால நூலான பண்டாரமும்மணிக்கோவையும், - - கரும்பு ஊண் வெறுத்த து ைதமலர் வேங்கை’2 -என் கின்றது. இதற்கு உ. வே. சா. அவர்கள் "வேங்கை மலரில் வண்டு விழாதென்பர்” எனக்குறித்தார். பிற நிகண்டுகள் வேங்கையில் வண்டுபடியாது என்றன. இவ்வாறு கூறுவானேன்? பொதுவாகக் கடவுளர் இடம்பெற்ற மலர், இடம் முதலிய வற்றில் வண்டு மொய்க்காது' என்றொரு மரபு உண்டு. காந்தள் முருகனால் விரும்பப்பட்ட நிலையில் 'சுரும்பு மூசாச்சுடர்ப்பூங் காந்தள்' எனப்பட்டது. மணிமேகலையில் 'புத்த பீடிகையின் மேல் வைக்கப்பட்ட அரும்பு மலரும்; மலர்ந்தது என்றும் வாடாது அதில் வண்டும் மொய்க்காது’ - என்றும் உள்ளன. இவற்றின் நோக்கில் பார்த்தால், வேங்கை ஒரு வகையில் தெய்வத் தொடர்புடையதாகக் கொள்ளப்பட்டதை எண்ணலாம். கழுவுள் என்பான் ஒரு குறுநிலத் தலைவன். அவனுக்கு உரிய ஊர் காமூர் என்பது. அவ்வூரில் இருந்த ஒரு வேங்கை மரம் பூதத்தால் தரப்பட்டதாகக் கருதினர். இதனாலும் வேங்கை தெய்வத் தொடர்பானதாகலாம். கற்புடைத் தெய்வம் கண்ணகியார் தம் இறுதிப் பதினான்கு நாள்கள், 'எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகார் கழனியின் இதனத்து ஆங்கண் ஏதிலாளன் கவலை கவற்ற ஒருமுலை யறுத்த திருமா வுண்ணி' யாக இடம் பெற்றதை மதுரை மருதன் இளநாகனாரும் குறித்துள்ளார். 1 9, நி : 2787 4 அகம் : 865 11, 15, 3. பன். மு. கோன் ; ; ; ; , 5 நற் : 216 : 6, 9, 3 త9లిల్ : 48. .