பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/449

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

429


'சினைய செண்பகம் வேங்கையோடு" கொண்டு வழி பட்டதைத் திருத்தக்கதேவர் காட்டியுள்ளார். - இலக்கிய வேங்கை இத்துணை சிறப்புற்ற வேங்கையின் பெயரைச் சூடிக் கொண்டவை உள. தமிழகத்திற்கு வடக்கே ஒரு நாட்டுப் பகுதி வேங்கை நாடு’ எனப் பெயர்பெற்றது. வேங்கை வளநாடன்' என அந்நாட்டு மன்னன் வீரசோழியத்தில் குறிக்கப்படுகின்றான்: கல்வெட்டுகளும் பேசும். வேங்கையூர் என்றொரு ஊர் மேற்கில் உளது. 'விறல்மிகு வேங்கை வெற்பு" என வேங்கையின் பெயர் சூடிய மலையொன்றைப் புறநானூறு (336:6,7) சுட்டுகின்றது. கானப்பேரெயில் என்னும் ஊர்த்தலைவன் 'வேங்கை மார்பன்' எனப் பெயர்கொண்டவன். (இங்கு வேங்கை புலியைக் குறிப்பதாகவும் அமையலாம்.) இலக்கணத்தில் பொதுமொழிக்குச் சான்றாக வேங்கை என்னும் சொல்லும் இடம்பெற்றது. வேங்கை என்று தனி மொழி யாகவும், வேம்+கை எனத் தொடர்மொழியாகவும் அமையப் பயன்பட்டது. வேங்கையைப்பற்றிய கருத்தை இத்துடன் நிறுத்தினால் குறை நிற்கும்; நிறைபெற்றதாகாது. ஏனெனில் புலவர் பெரு மக்கள் பார்வையில் வேங்கை சுவையான கற்பனைகளை படைத் துள்ளது. அவற்றைக் காட்டாவிடில் இலக்கியம் சினுங்கும். வேங்கையோடு புலியும் யானையும் கொண்ட இயைபை விடத் தோகை மயில் கொண்ட இயைபு அழகானது. மலை மயில் வேங்கை மேல் தங்குவது. கபிலர் பார்வை, வேங்கை மரத்தில் ஏறியது. ஒருகிளையில் தோகைமயில் நிற்கின்றது. பொன்னெனப் பூத்த மலர்க்கொத்துகளின் சூழலில், அதனை, ,8 * 1808; 8 ,بع کلي 1