431
481 காட்சி : கருத்து எதிர்எதிர் இருமலைகள் - தலைவன், தலைவன் சுற்றத்தார்; அவற்றிடை அடுக்கம் - தலைவன் மனை; வீழும் இரண்டருவி - இரு சுற்றத்தார் செய்யும் - சிறப்புகள் , கொத்து மலர்ந்தது - தலைவி மக்களைப் பெற்றமை, வேங்கை - தலைவி -என்னும் உள்ளுறைக் கருத்தில் வேங்கையை இல்லறத் தலைவிக்குப் படைத்தார். இதற்கு விளக்கம் எழுதிய நச்சினார்க்கினியர், வேங்கை சிறப்பெய்தினாற்போலத் தலைவியும் நின் இல்லின்கண் வந்து சிறப்பெய்துமாறு' - என்றார். இதனால் மலைச்சூழலில் வேங்கையின் சிறப்புடைமை வெளிப்படுகின்றது. வேங்கை இல்லறம் ஏற்க நிற்கும் மங்கல மங்கையாகக் கபிலர் கருத் தால் காணப்பட்டது. - காப்பியாற்றுக்காப்பியனார் பார்வையிலும் இதுபோன்று வேங்கை மெல்லிய மகளிர் எழில், மேலும் சிறக்க விளங்கும் பொன் இழைகளை அணிந்ததற்கு 'மலர்ந்த வேங்கையின் (போல) வயங்குழை அணிந்து' 1 -எனப் பெர்ன் கொத்தாகப் பூத்த வேங்கையைச் சொன்னார். இங்கு வேங்கை மங்கல மடந்தை, வாழ்நாளெல்லாம் மங்கல மடந்தையாகவே நிறைந்துவிடு வோரும் உளர். கழிகல மகளிராகிக் கைம்பெண்ணாவோரும் உளர். வேங்கை அப்பங்கிற்கும் ஈடு கொடுத்தது. கோடை நீடிய காலம். சுனையும் வரண்டு அருவி நீரும் விழவில்லை. கடுங்கோடை. பெரும் வரட்சி தாக்கியது. கன்று காலிகள் அலைந்தன. பால்தரும் ஆவினங்களுக்கும் இரையில்லை அக்காலத்திலும் தழைத்திருந்தது வேங்கைமரம். ஆயர் ஆவினங் 'களை ஒட்டிச்சென்று தமது கூரிய வாளால் பூக்களுடன் தழை 1. பதிற் : 40:22,