பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/453

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
433


போன்றது' எனப் பாடப்பட்டது. இவ்வாறு வேங்கை பைம் பொன் மாளிகையாயிற்று, கண்ணனார் என்னும் புலவர் கண்ணில் ஆழ்ந்த காட்சி ஒன்று: புலியோடு மோதியது ஒரு களிறு. வென்றுவிட்டது. வேங்கை மரத்தடியில் இப்போர் நடந்தது. வென்ற களிறு எய்ப்பு நீங்கத் தன் தும்பிக்கையை உயர்த்தி ஒரு பெருமூச்சு விட்டது. அம்மூச்சுத் தாக்குதலால் வேங்கைப் பூக்கள் தனித் தனியே சிதறிப் பாய்ந்தன. இக்காட்சி, கொல்லன் ஊதுலையினின்றும் எழும் காற்றால் உலை நெருப்புப் பொறி பிதிர்ந்து பாய்வதைப் போன்றிருந்தது. பாய்ந்து பக்கத்துக் கரும்புதரில் படிந்த காட்சி மின்மினிப் பூச்சி தாவிப் படிந்தது போன்றது என்றார். கருங்களிறு கொல்லனாக, தும்பிக்கை ஊது உலையாக, அதன் உள் துளை உலைக் குழாயாக, களிறு காலை ஊன்றியது உலைத்துருத்தியை மிதித்ததாக, பெருமூச்சு உலையின் வெப்பக் காற்றாக, செம்பொன் நிறப் பூ நெருப்பின் பிதிர்வாக, சிதறல் பொறிப்பாய்வாக, மினுமினுப்புடன் கீழிறங்கிய பொறி மின்மினிப் பூச்சியாக, தாவியதை ஏற்ற தாய் கரும்புதராக, ஒவ்வொரு நிலை யினும் பொருந்தக் கூறிய திறம் சுவை பயப்பது. நேரிற் பாடலைச் சுவைப்பது காட்சியை நேரிற் காண்ப தாகும்: 'பு லிப்பகை வென்ற புன்கூர் யானை, கல்லகச் சிலம்பில் கையெடுத் துயிர்ப்பின் நல்லினர் வேங்கை நறுவி, கொல்லன் குருகு ஊது மிதி உலைப் பிதிர்விற் பொங்கிச் சிறு பல் மின் மினி போலப் பலவுடன் மணிநிற இரும்புதல் (புதரில்) தாவும்’’’ புலவர்கள் பார்வை மட்டுமோ? புரவலர் பார்வையில் வேங்கை படாமலோ போகும்? ஒரு முடிமன்னன்; பாண்டிய மன்னன்; இளம்பெருவழுதி என்பது அவன் பெயர். மலைப் 1 :வ. சி :87 2 அகம் : 202 : 8.8 来28