பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434


பயணத்தை மேற்கொண்டான் போலும். கண்ட கண்கள் மலர்ந்தன. ஏனெனில் கண்டவை யாவும் மலர்ந்தவை. சுனை யில் நீலமலர் மலரைக் கண்டான்; சுனை சூழ்ந்த அசோக மரக் கிளையெல்லாம் பொன்பூ, மலரக்கண்டான்; அவற்றுடன் காய் கனி நிறங்களில் மாறுபட்ட நிறத்தில் வேங்கை, பொன்னாக மலரத் கண்டான். இக்காட்சியை, 'நனைவேங்கை ஒள்ளினர் மலர - மாயோன் ஒத்தலின்' -என்று திருமாலை ஒத்ததாகப் பாடினான். எவ்வாறு திருமாலுக்கு ஒப்பாயிற்று? பரிமேலழகர் தமது உரையில் ஒப்பிடுகின்றார்: ; 'நீல மலரைச் சூழ்ந்த செயலை மலர், அவன் பொன்புனை உடுக்கைக்கு ஒப்பு; குன்றத்துக் காய் கனி போல மலர்ந்த வேங்கை, அவன் (திருமாலின்) மணிமுடிக்கு ஒப்பு - இவ்வாறு ஒப்பிட்டுக் காட்டப் பாடியவனும் பொன் முடி சூடிய மன்னன். அவன் பார்வையில் பொன்முடியாகப் பட்டதில் வியப்பில்லை. - - . இவ்வாறெல்லாம் வேங்கை பொன் நிறமாக, பொன் அணி யாக, பொன் மாலையாக, பொன் முடியாக விளங்குவதால் பொன்னிற்கே தனது பெயரைச் சூட்டியது. - " - பொன்னைக் குறிக்கும் சொற்கள் பலவற்றுள் வேங்கை என்பதும் ஒன்று. "ஆடகம், வேங்கை, அரிசெய் தாது مچ و به هر - به ء ی دهه * هان * = **** இந்த வகைப்பெய ரெல்லாம் பொன்னே” - என்று பிங்கல நிகண்டு பட்டியலில் அமைத்துள்ளது. பிற நிகண்டுகளும் அமைத்துள்ளன. - - . . . oມrds, பொன்னில் பெயர் பொறித்த வேங்கை பொலிக 1 பரி :15: 82, 39, 2 பில் நி: 1232.