பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/455

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
435

 3. பொன் மலர்

கொன்றை

பொன்மலர் நாற்றமுடைத்து பொன்னாகப் பொலியும் பூக்களில் கொன்றை திறைவான இடம் பெற்ற பூவாகும். இலக்கியங்களில் பொன்பொன்னாகப் பூக்கின்றது: 'பொன்கொன்றை' (பொருந் ! 201) 'பொன் வீக் கொன்றை ' (நற் : 246 :8) 'கொன்றைப் பொன் நேர் புது மலர்' (அகம் : க.வாழ்த்து:1) • பொன் என மலர்ந்த கொன்றை ' (ஐங் : 420 : 14) 'பொன் எனக் கொன்றை மலர' (நற் : 242 : 3) 'பொன் தேர் கொன்றை மாலை' (ஞான : தே மீஞ்சூர்:3:1) -என்றெல்லாம் கொன்றையைப் பொன்னாக, பொன்போலக் காண்கின்றோம். பொன்னாலான தாளமிட்டுப்பாடும் திருஞானசம்பந்தர், “கொன்றை கள் பொன் சொரிய'க்? - கண்டார். சங்க இலக்கியங்களில் தோய்ந்த பாவேந்தர் பாரதிதாசனார், “நின்றசெங் காந்தட்டி நேரில் கை ஏந்தநெடும் கொன்றைமலர் பொன்னைக் கொட்டுகின்றாள்"' 2 - என்று காந்தளைக் கை ஏந்த வைத்துக் கொன்றையை வள்ளலாக்கிப் பொன்னையே கொட்டவைத்துள்ளார். பொன் வாணிகர் ஒருவரது மகன் ஒரு புலவர், பெயர் நப்பூதனார். இளமை முதல் பொன்னின் ஒளியைக் கண்டவரன்றோ ? அப்பழக்கத்தில் போலும், 'கொன்றை நன்பொன் கால" - என்று கொன்றை பொன்னின் ஒளியைக் காலுவதாக -- வீசுவதாகக் கண்டார். அதிலும், பொன்னின் மாற்றுப் பார்த்தவர்போல் " நன்பொன்' என்றார், இவ்வொளி மாங்குடி மருதனார் பாட்டில், - 8 முல், பா! 94, 1 ஞான, தே : புகலி ; 6. 8. தயிற்பாட்டு எக்கச்சக் குயில் :1, 2,