பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438


'கவலை கெண்டிய அகல்வாய்ச்சிறுகுழி கொன்றை ஒள்வி தாஅய்ச் செல்வர் பொன்பெய் பேழை மூய் (முடி) திறந்தன்ன' இருந்த தாம். இவ்வாறு பல வகையானும் பொன்னாகப் பேசப்பட்டது கொன்றை. கொன்றையின் நிறம் இவ்வாறு பெரும்படியாகப் பொன் என்று பாடப்பட்டிருப்பதற்கேற்ப அதன் மணம் குறிக்கப்பட வில்லை. ஒரு சில இடங்களில் 'நாறு இணர்க் கொன்றை "நறுங்கொன்றை அலங்கல்’ என மணம் பற்றிய குறிப்பைக்' காண முடிகின்றது. இயல்பாக மலர்களுக்குள்ள மன அளவி லேயே கொன்றை மணம் கொண்டது. கவர்ந்திழுக்கும் அளவில் மணச்சிறப்பைப் பெற்று விட்டால் 'பொன் மலர் நாற்றம் உடைத்து’ என்னும் பழமொழி இயற்கையிலேயே உண்மை யாகியிருக்கும். மரத்தில் கொடிப் பூ நீடு தொடராக - மாலையாகப் பூக்கும் இதன் கொத்து ஒரு கொடியில் அமைப்பாகப் பூக்கள் மலர்ந்தமைபோன்றிருக்கும். இதன் இரண்டு கொத்து அடுத்தடுத்துத் தொங்குமானால் ஒரு மாலை போன்றே தோன்றும். ஒவ்வொரு கொத்தும் ஒரு கொடிக் கொத்தாகத் தோன்றும். இக்கொத்தில் பூக்கள் ஒழுங்காக அமைந்திருப்பதால் இக்கொத்து 'கொடிஇணர்' எனப்பட்டது. "வண்டு படத் ததைந்த கொடியினர்..........கொன்றை” (குறு : 21 : 1, 3.) . "......... , ...கென்றை கொம்புசேர் Θασφαλοπή ೩೮೪ಕಿ” (ಅಖ 66 1,4.] 'புழற்காய்க் கொன்றைக் கோடணி கொடியினர்' (நற்: - . 296 : 4) கொன்றை கொடியினர் ஊழ்ப்ப’ (பரிபாடல் : 8 : 24) குறுந் 288 : -3