பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

439


இவ்வாறு கொடியினர் என்னும் தொடரால் கொன்றைக் கொத்து குறிக்கப்பட்டது. இத்தொடர் கொன்றை ஒன்றற்கே இலக்கியங்களில் காணப்படுகின்றது. மேலிருந்து கீழே தொங்கும் இதன் காம்பு ஒருகொடிபோன்று அமைய, இக்கொடியில் மலர்கள் ஒழுங்காக அமைந்திருப்பது இக்கொன்றைக்குத் தனி அமைப் பானது. மேலும் இக் கொத்து தொகுப்பான பார்வையில் ஒரு கொடி போலத் தோன்றும். இக் கொடியினர்’ என்னும் அடைமொழியே பிற்காலத்தில் இதற்குச் சரக்கொன்றை என்னும் பெயர் ஏற்பட அடித்தளமாயிற்று. கொன்றையில், சரக்கொன்றை, பெருங்கொன்றை, புலிநகக் கொன்றை, சிறு கொன்றை, மயிற்கொன்றை, மந்தாரக்கொன்றை, காக் கொன்றை, எருமைக் கொன்றை, செங் கொன்றை, நரிக் கொன்றை, கிடைக் கொன்றை எனப் பல வகைகள் உள்ளன. இவற்றில் இலக்கியங்களில் பெரிதுபடப் பேசப்படுவது சரக் கொன்றையே; கொடியினர் எனக்குறிக்கப்பட்ட கொன்றையே. இக்கொன்றைக்கே காயின் கருமை காரணமாகக் கருங் கொன்றை என்ற பெயரும், சிவனுக்குரியதானதால் 'திருக்கொன் றை என்ற பெயரும் அமைந்தன. இப் பூ நிறைவாக மலர்ந்த நிலையில் வட்ட வடிவமாக இராது. ஒரு கீழ்ப்பக்கம் ஒரளவில் இதழ்கள் சிறியதாகச் சுற்று விளிம்பு குறுகிவரும். இது சிவபெரு மானுக்குரிய வகையில் தெய்வத் தன்மை பெற்றதையும் உள்ளத்தில் கொண்டு இச்சுற்றுவிளிம்புத் தோற்றத்தை 'ஓம்' வடிவாகக் கண்டனர் சைவர். ஓம் பிரணவம் என்று குறிக்கப்படுமன்றோ அதனால் 'பிரணவக் கொன்றை என்ற பெயர் ஏற்பட்டது. திரு. வி. க. அவர்களும் 'கொன்றை பிரணவத்துக்கு அறிகுறி” ! என்றார்கள், மேலே காணப்பட்ட பெயர்கள் யாவும் நாட்டு வழக்கில் உள்ளவை. சரக்கொன்றை, புலிநகக் கொன்றை என்னும் பெயர் கள் உரையாசிரியர்களால் பேசப்படும், பிறவெல்லாம் ஓரளவில் மருத்துவத்தாரால் எழுதப்படுபவை. பிங்கல நிகண்டு, 'இதழி, கடுக்கை, தாமம், கொன்றை' (2666) என்று சொல்லி, மேலும் 'மதலை, ஆர்க்குவதம் என்றா கும்’ என மேலும் இரண்டைக் குறித்தது. சேந்தன் திவாகரம் 1 பெரி:பு : தடுத்தாள். குறிப்புரை