பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

441


மேலே காட்டிய அடிகளில் வரும் 'கோடு அணி கொடி யினர்' என்பதில் கோடும் குறுங்கால்’ என்பதும் இது மரக் கிளையிற் பூப்பது என்றும்? அம்மரம் குட்டையானது என்றும் அறிவிக்கின்றன. எனவே, இது கோட்டுப் பூ. இக் கோட்டுப் பூ, "கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்" (அகம்.க. வா.) 'கண்ணிகா நறுங் கொன்றை" (புறம், -க. வாழ்த்து :4) 'அதிர்பெயற் கெதிரிய சிதர்கொள் தண்மலர்' (ஐங், 458 : 2) புதுப்பூங் கொன்றைக் ۳۰ -مید ... .... " கானம் கார் எனக் கூறினும்’ (குறுந் : 21 : 3, 4.) - -என்றபடி கார்காலத்தில் மலரும் பூ. பருவம் அல்லாத கார் என்னும் வம்ப மாரியையும் உண்மைக் கார் கால மழை என்று மயங்கிப் பூக்கும் பூக்களோடு சேர்த்துப் பாடப்படும். இக் கொன்றையைத் தனியாகவே காட்டி" 'ஏதில பெய்ம்மழை காரென மயங்கிய பேதையங் கொன்றை' -என்றார் பேயனார். பிறகும் இவ்வாறு பாடியுள்ளனர். இப்பூவின் வளர்ச்சிப் பருவத்தை நோக்கினால், வாய் நெகிழாத பசிய மொட்டு, சிறுமிகள் விளை யாடக் கொள்ளும் கழற்சிக்காய் போன்றிருக்கும். வாய் நெகிழ்ந்த போது, கிண்கிணி போன்றும், பொன்காசு போன்றும் பொன்னாற் செய்த வட்டுக்காய் போன்றும் தோன்றும் மலரோடு கூடிய கொத்து, மாலை போன்றும், விரிந்த மலரின் இதழ், மடலாகவும் 1 ஐங் : 462 : 1, 2,