பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/463

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
448


அணிந்தும் மகிழ்வர். இடைக்குலத்து மகளிர் கதுப்பிலும் குழலிலும் சூடிக்கொள்வர். ஏறு தழுவலின்போது, வென்றி மழவிடை ஊர்ந்தார்க் குரியளிக் கொன்றையன் பூங்குழ லாள்' -எனக் கொன்றைப் பூச் சூடிய இடையர் மகள் அடையாளங் கூறப்பட்டாள். நல்ல மழை பெய்து நீர் கண்ட உழவர் முதலில் பொன் ஏராக, 'கடிஏர் பூட்டுநர் கடுக்கை மலை'2 ந்தனர். போர்க்களத்து வீரரும் பனங்குருத்தைப் பிளந்த மடலுடன் "நாறு இணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணிய’’3 ராக விளங்கினர். பாலை நிலத்திலுள்ள மள்ளரும் மழைக்காலத்தில் கொன்றை பூக்கும்போது, "சுடுபொன் அன்ன கொன்றை சூடி கடிபுகு வனர்போல் மள்ளர்’4 -எனப்பட்டனர், திருமணத்திற்குச் செல்வோர் (கடி புகுவனர்) மனமலர் குடி: செல்வர் என்பதையும் இது காட்டுகின்றது. முன்னையத் தமிழ்நாடாகிய இன்றைய மலைஞாலத்து மகளிர் தம் புத்தாண்டு நாளாக 'விசு என்னும் ‘விசுக்காணி’ கொண்டாடுவர். இதுபோது பொன்போன்ற கொன்றைப் பூவைப் பரப்பி மகிழ்வராம். ஆண்டெல்லாம் பொன் கொழிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தில் இவ்வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இதனை உழவர் பொன் ஏர் பூட்டுதல் என்பதோடும், அதுபோது பொன் நிறக் கொன்றையைச் சூடினர் என்பதோடும் இணைத்துக் காணலாம். மாந்தர் கொன்றையை அணிந்தமை முற்காலப் பழக்கம். கடவுளர்க்கு அணிவித்த பழக்கம் முற்காலத்தும் இக்காலத்தும் இலக்கியங்களிலும் காணக் கிடைக்கும் ஒன்று. கொன்றை சிவபெருமானுக்கு உரியதாக்கப் பட்டது அவருக்கு உரிய பூக்களில் கொன்றையே முதலிடம் பெற்றது. 1. சிலம்பு : 17 11 : 1, 2, 3 பதிற் : 67 : 18, 2 பதிற் : 48 : 16 4 ஐங் : 482 : 2, 3,