பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

445


'கொன்றை வேய்ந்த செல்வன் இணையடி’! -என்று "வேய்ந்த' என்றே எழுதிக் காட்டினார். நச்சினார்க்கினியரும் இப்பாடமே கொண்டார். யாப்பருங்கல விருத்தியிலும் இப்பாடமே உள்ளது. பிற்காலத்தார் கடவுள் வாழ்த்தைப் பிள்ளையார்க்கே காட்ட வேண்டும் என்னும் கருத்தில் கொன்றை வேந்தனாகிய சிவனது செல்வன்- பிள்ளையார் இணையடி என்று பொருள் கொள்ள, 'கொன்றை வேந்தன்" எனப் பாடத்தை மாற்றினர் போலும், ஆத்தி சூடி என்னும் தொடரில் சூடி என்னும் சொல் உளது. கொன்றை வேய்ந்தானில் வேய் ந்தான்’ என்னும் சொல் உளது. இரண்டும் தலையில் சூடுதலையும் வேய்தலையும் அஃதா வது செருகுதலையும் குறிப்பதாக அமைந்துள்ளன. இப் பொருத் தம் கொன்றை வேய்ந்தான் என்பதே பொருந்துவது என்ப தைக் காட்டுகின்றது. சிவனுக்கு எந்த அடியார் முதலில் கொன்றையைச் சூட்டி அவருக்கு உரியதாக்கினரோ அறியோம். ஆனால், ஆத்தியைச் சூட்டியவர் விசாரசருமர் என்பதை ஆத்தி மலர் விளக்கத்தில் கண்டோம். தன் வழிபாட்டிற்குத் தடைசெய்த தந்தையையே தடிந்தவரன்றோ விசாரசருமர்? அதனைப்ப ராட்டிச் சிவபெருமான் விசாரசருமரைச் சிவ அடியார் அனைவருக்கும் தலைவராக்கினார். தனக்கு ஒப்பாக அதிகாரம் கொடுத்தார். தாம் உண்ட கலன், உடுப்பவை, சூடுபவை யாவற்றையும் விசாரசருமருக்கு வழங்கிச் "சண்டேசுர'ப் பதவியையும் அளித்தாராம். அப்பதவி வழங்கப் பட்டதன் சான்றிதழ்போன்று, '... , ... ... அவர்முடிக்குத் துண்ட மதிர்சேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்',? இதுகொண்டு கொன்றை ஒரு சான்றுப்பொருள் ஆகுமளவில் சிவபெருமான் முடியேறிய தாயிற்று. விசாரசருமரும் ஆத்தியைச் சூட்டிக் கொன்றையைப் பெற்றுக்கொண்டார். சங்க இலக்கியம் முதல் இன்றையச் சைவ இலக்கியம் வரை - சிவனுக்கு எதைச் சூட்ட மறந்தாலும் கொன்றையை மறப்பதில்லை. தேவார மூவரும் இதனைப் பாடாத வகையில்லை என்னும் அளவில் பாடல்களில் அமைத்துள்ளனர். 1 தொல் : பொருள் : செய் : 149 உரை 2 பெரி, பு : சண்டிேகர : 56 : 3, 4.