பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446


தவம் செய்யும் கொன்றையும் தவிலடிக்கும் கொன்றையும் கொன்றைப் பூவில் உருவாகிய காய் இலக்கிய இடம் பெற் றது. இக்காய் கருமை நிறத்தில் நீண்டு தொங்கும். இதன் நீட்சியும் நிறமும் தொங்கி அசைதலும் கல்லாடர் கண்ணில் கருமை எலி - காரெலியின் வாலாகத் தோன்றிற்று. அதன் வாலைச் சொல்லுபவர் கடுக்கையின் சிறு காயை எலியின் உட லில் அடைய வைத்தது போன்ற வால் என வைத்து, "கடுக்கைச் சிறுகாய் அடைத்த வால் கருப்பை' -என்றார். காரெலிக்குக் கருப்பை என்பது இலக்கியப் பெயர். இதுகொன்றை யின் நெற்றாக முற்றாத சிறிய காயைப் பற்றியது. நன்கு முற்றி நெற்றான காய் யாழின் கோட்டிற்கு ஒப்பாக்கப் பட்டது மாமூலனாரால், அதனையும் ஒரு வரலாற்று நிகழ்ச்சி யுடன் இணைத்தார்: 'எவ்வி என்பான் ஒரு குறுநிலத் தலைவன். அவன் பாணர்க்கு வாரி வழங்குபவன். அவன் போர்க்களத்தில் வீழ்ந்தான். அவனை இழந்த பாணர் தாம் இதுவரை தொழுது மீட்டிவந்த யாழையே முறித்து வீசி எறிந்தனர். அவ்வாறு முறித்து வீசப்பட்ட யாழின் கோட்டைமருப்பைப் போலக் கொன்றை நெற்றுகள் மரத்திலிருந்து உதிர்ந்தன' -என்றார்.

- இக்காய் திரண்டுருண்டு தொங்கும் தோற்றம் தவம் செய்வோரது திரண்ட சடைக்கற்றை போன்றது. இவ்வாறு ஒவ்வொரு காயும் ஒவ்வொரு சடைத் திரட்சியாக மரமெல்லாம் தொங்குவதைக் கண்ட சல்லியன்.குமரனார் என்பார் மரத்தோடு சேர்த்து உவமையாக்கினார். பொரிந்துள்ள அடிமரத்தைக் கொண்ட கொன்றை மரம் ஆடாது அமர்ந்திருக்கும் தவத்தவர் மேலே தொங்கும் நெற்றுக் காய்கள் சடைக் கதிர்கள். இவ்வாறு பொருத்தமாக்கி, -

1 ಕಿ: 68 : 12 - 2 அகம் : 15 8-11