பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448


"ஒழுகிய கொன்றைத் தீங்குழல் முரற்சியர்' எனப்பட்டனர். கொன்றைக்காயின் உள்ளே உள்ள விதைக,ை ஒருபக்கம் துளையிட்டு எடுத்துவிட்டு ஊதும் குழலாகப் பயன் படுத்தினர். 'கோற்கைக் கோவலர் கொன்றையங் குழலர்’ (அகம் : 54 : 10, 11) 'பல்லா தந்த கல்லாக் கோவலர் - கொன்றையந் திங்குழல் மன்றுதொறும் இயம்ப' (நற் : 364 : 9, 10.) என்றெல்லாம் பல இடங்களில் காணப்படும். இக்குழல் கோவலர்க்கே உரியது. அவர்தம் சூழலில் வளர்ந்த கண்ண லுக்கும் உரித்தாக்கப்பட்டது. - : இவ்வாறு குழல் செய்யப் பயன்பட்டதன்றி இக்காய் வேறு எதற்கும் பயன்படாதது. பயன்படாத இக்காய், கொன்றை மரத்தில் சடை சடையாகப் பெருகிக் காய்க்கும். பயன்படும் காய்கள் இது போல் காய்க்கவில்லையே என்று ஏக்கங்கொண்டார் கொங்கு வேளிர். இதைப்போலப் பயற்றின் நெற்று பெருகினால் எத் துணை பயன்’ என்று கருதினார். அதனிலும் ஒவ்வொரு பயற்றங் காயும் கொன்றைக் காய் போன்று பெரிதாக இருந்தால் எவ்வளவு நன்மை’ என்றும் அவரது உள்ளம் எழுந்தது. ஆனால் இயற்கையில் அமையாது போயிற்றே என்று கவன்றார். திருவள்ளுவர் இரப்பு வாழ்வைப் படைத்த உலகியற்றியான் பரந்து கெடுக’ என்றார். கொங்குவேளிற் படைத்தவனை அலையவைக்காமல் குற்றஞ்சாட்டுகின்றார்: "ஒருபேர் உலகம் படைத்த பெரியோன் கொன்றையம் பசுங்காய் பெருக்கியும், பயற்றின் நன்றுவிளை நெற்றினைச் சிறுக்கியும் படைத்தான். "இனையவை பிறவும் இசைவில; ೧೧78 படைத்தோன் படைத்த குற்றம் இவை’’’ -என்றார். இக்கருத்து வாழ்வியல் நலன்கருதும் பொருளியல் கருத்தன்றோ? - - 1 கலி ; 108 : இ 2 பெருங்கதை : மகத 15:8, 5, 6, 9, 10,