பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/471

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
451


குறிப்பிடும் பொருளில் கன்னிகாரம்' என்றொரு பெயர் இதற்கேற் பட்டது போலும். சூடாமணி நிகண்டு கோங்கிற்குத் துருமோற்பலம், கன்னி காரம் என்னும் பெயர்களோடு நிறுத்திக்கொண்டது. பிங்க? நிகண்டு பினர், குயா என்னும் இரு பெயர்களை அறிவிக்கச் சேந்தன் திவாகரம் பவனி என்றொரு பெயரோடு 'கு'சி' என்னும் பெயரையும் குறித்துள்ளது 3 ஞாழல்'என்பது எவ்வ?* யிலும் பொருந்தாத சொல். ஞாழல் என்பது தனியொரு மரம். இத் திவகாரம் கொடுக்கும் மயக்கங்களில் இஃதும் ஒன்று. இந்நூலிசி சில இடைச்செருகல் உண்டு என்பர். அவ்வாறு அமைந்திருக் கலாம். மற்றையச்சொற்களில் பினர் என்பது சுரகரப்பு’ என்னும் பொருள் தருவது. சுரசுரப்பை உரையாளர் சருச்சரை" என்பர். கோங்கு மரம் "பொரியரைக் கோங்கு' எனப்படும். பொரி = சருச்சரை. இப் பினர் என்னும் சொல் இலக்கியங்களில் யானை யின் தும்பிக்கைக்கு அடைமொழியாக்கப்படும். தும்பிக்கை சருச் சரை வாய்ந்தது. கோங்கின் கிளைகளும் இதுபோன்று அமைந் தது. இக்காரணத்தால் பினர்' என்னும் பெயர் பெற்றது. மற்றைப் பெயர்கள் காரணமற்றவையாக உள்ளன. நூல்களிலும் இடம்பெற்றில. இதனாற்போலும் பின்னர் எழுதப்பட்ட சூடாமணி நிகண்டு இப்பெயர்களையெல்லாம் விடுத்தது. இப்பெயர்களில் கன்னிகாரம் சங்க இலக்கியங்களில் இல்லை. சிலப்பதிகாரத்தில், "கடிமலர் அவிழ்ந்த கன்னி காரத்துத் தொடிவளைத் தோளி ஒருந்தி தோன்றி” -என வருகின்றது. ஆனால், சங்க நூலான கலித்தொகையில், மாவின்ற தளிரின் மேல் கணிகாரம் கொட்கும் கொல்’’ என்பதில் கணிகாரம்’ என்பதற்குக் கோங்க மலர்’ என்றபொருள் கூறப்பட்டுள்ளது. இச் சொல் நிகண்டில் இல்லை. இச்சொல் கணிகை + ஆரம் என்றாக லாம். ஈழநாட்டு நல்லூர்ப் பொன்னம்பலப் பிள்ளை என்பார் 1 சூடா : மரப்பெயர் : 4 : : 2 4 ஐங் 867 : 1. 2 பிங். நி : 2688 5 சிலம்பு : 1.1 ; 110, 111. 3 சேத், தி மரப் பெயர்த் தொகுதி 5 கலி: 148; 4, 5,