பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

453

இம்முகை முற்றிய மரத்தின் முகையாக இருத்தல் சிறப்பாம். மரம் முற்றியது. ஆனால் முகை முதிராதது; மார்பு முற்றாத இளமையது என, நயமாக, "முதிர் கோங்கின் முகையெண்' (கலி :59, 23) 'கோங்கின் முதிரா இளமுகை ஒப்ப" (கலி : 1.17 : 2, 3) "முகைவனப் பேந்திய முற்றா இளமுலை' எனும் இவ் வடிகள் பேசுகின்றன. இவற்றைக்கொண்டு கோங்க முகையின் அமைப்பை -தன் மையை அறியலாம். அடி பரந்திருக்கும்; முனை குவிந்திருக்கும்; இதழ் மென்மையானது; வனப்புடையது; விளங்கக் கூடியது; முகை களில் பெருத்துத் தோன்றுவது; முகைத்து நிற்பது -என்றெல் லாம் காணமுடிகின்றது. இம்மலரின் இதழ்கள், "புல்விதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப் பூ’ ! என்றபடி இம்மலரின் இதழ்கள் புல்லியவை; மெல்லியவை. இதழ்கள் நிறைவாக விரிந்துள்ள நிலையில் விரித்த குடை போன்றிருக்கும். அதனால் 'குடைப் பூ எனப்பட்டது. பொன்னிறமான இப்பூ மகளிர் தலையிற் சூடிக்கொள்ளும் 'திருகுப் பூ என்னும் தலையணி போன்றது என்று காட்டும் நக்கீரர், ‘தேர்ந்த கலைத்திறம் வாய்ந்த கம்மியன் அரதனக் கற்களைப் பதித்து இழைத்துச் செய்த திருகுப் பூ உரு வத்தில் மலர்வது கோங்கம் என்றும், பெரிய பூ'? என்றும் வண்ணித்தார். இப் பூ தனிப் பூவாகத் தொடர்ந்து பூத்திருக்கும் காட்சி யைக் கண்ட பாரதம்பாடிய பெருந்தேவனார்,