பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/474

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
454


கார்த்திகைத் திங்களில் ஏற்றப்படும் விளக்கு வரிசை போல - நெடுங் கொடியாகப் பல பூக்கள் விளங்கின' -என்று பாடினார். புல்லிதக் கோங்கின் மெல்லிதழ்க் eω-δg வைகுறு மீனின் நினையத் தோன்றி"2 -என அப் பெருந் தேவனாரே வானத்தில் ஒளிரும் விண்மீன்களின் நினைவை எழுப்புவதாகப் பாடினார். மலர் இவ்வாறு விளங்க, மலரின் உள்ளே நடுவண் அமைந்த பொகுட்டு எலியின் வளைந்த காது போன்று தோன்று வதை வைத்து மருத்துவன் தாமோதரனார். "வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன குடந்தையஞ் செவிய கோட்டெலி’3 -என எலியின் காதிற்கு உவமையாக்கினார். இதன் தாதுத் துளும் பொன்னிறமானது. மகளிரது பசலைக்கு உவமையாகக் கூறப்பட்டது. கணிகாரம்’ என்னும் பெயருடன் பாடிய கலித்தொகை, - மாந்தளிர் போன்ற நிறங்கொண்ட மங்கையர் உடலில் பொன்னிறமான பசலை, மாந்தளிர் மேல் கோங் கந் தாது கொட்டியது போன்று அழகு செய்தது’* -என்று பாடுகின்றது. ജ്ജ് ஐந்து பெரிய இதழ்களையுடைய தனிப் பூ. நீண்ட தனக Tಚ್ಟೆ பூக்கும். இரண்டு மூன்று காம்புகள் அடுத்தடுத்துச் சேர்த்திருக்கும். இச்சேர்க்கை கொண்டு, "தேன்பாய்ந்து ஆர்க்கும் தெரியினர்க் கோங்கு'5

  • முறியினர்க் கோங்கம் பயந்த மாறே6 -எனப்பட்டது இருப்பினும் இது தனிமலராகவே கொள்ளத்தக்கது.

நற்2ெ02 :9-11 4. கலி : 148 : 1.6 2 6ಣ ಕ್ಷಿ 3,4, 5 அகம் : 1.53 : 16 ? புறம் 2ே1 : 4, 5 6 ஐங் : 866 : 5