பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/475

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
455


. பொன் போன்ற நிறத்தில் அழகிய பூவாயினும் பரவலாகச் சூடிக் கொள்ளப்படவில்லை. ஒரோவொருகால் ஆடவர் சூடுவர். வேங்கை மலருடன் இதனையும் மிலைச்சியதாகக் காண்கின்றோம். (ஐங் : 367). தலைவன் பரத்தைக்குக் கோங்கம் பூவாலாகிய படலையை வழங்கியதாகத் தலைவிச் சினந்தாள் (ஐங் : 370). தலைவன் ஒருவன் தலைவிக்குக் கையுறையாக இம் மலரை வழங்கிய கருத்து உள்ளது (ஐங் : 368). பெருமளவில் அல்லாமல் அருகிய வழக்காகவே இப் பூ சூடுதற்குப் பயன்பட்டுள்ளது. இக்கோங்கமரம் மலைப்பகுதிகளில் வளரும். 'தண்ன ரும் கோங்கம் மலர்ந்த வசையெல்லாம்” (கலி : 42 : 1.6) "ஓங்குவரை அடுக்கத்து............... தேன் பாய்ந்து ஆர்க்கும் தெரியினர்க் கோங்கு’’ (அகம் : 1.53 : 14, 16) "வேங்கை வெற்பின் விரிந்த கோங் த’ (புறம் : 336 , 9.) -என்றெல்லாம் மலையிடம் குறிக்கப்பட்டுள்ளது. இவைகொண்டு, இதனைக் குறிஞ்சி நில மலர் என்று கொள்ளலாம். ஆயின் மேலே கண்ட 'ஒங்குவரை அடுக்கத்து’ என்பது மலைப் பூவாகக் குறித்தாலும், இப்பாடலின் இறுதியடி "மைபடு மாமலை விலங்கிய சுரன்' என்று சுரத்தை-பாலையைச் சுட்டுகின்றது. மேலும் தலை வன் தலைவியை உடன் போக்காக அழைத்துச் செல்லும் பாலைத் திணைப் பாடல்களில் இக்கோங்கு குறிக்கப்படும். பல்பூங் கோங்கம் அணிந்த காடே" எனப் பாலை குறிக்கப் பட்டுள்ளது. ஐங்குறுது ற்றில் பாலைத்தினைப் பாடல் ஒன்று (370) அத்திணைக்குரிய முதற்பொருளே, உரிப்பொருளோ பெறாமல் உளது. கருப்பொருள் கொண்டே அதன் திணையை வரையறுக்கவேண்டும். அப்பாடலில் வரும் கருப்பொருள் கோங்கு ஒன்றே. எனவே, அதற்கு உரைவகுத்த பழைய உரைகாரர்,

இது பாலைத்திணைக்குரிய கருப்பொருளாகிய கோங்கு கூறினமையால் பாலையாயிற்று' எனக் காட்டியுள்ளார். அவரே, 366ஆம் பாடலின் உரைக்குறிப்பில்,

1 தற் : 202 : 11