பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

457


கோங்க மலரை அணிந்து வேனிற் பருவத்தில்தே ரொடு வந்தான் (ஐங் : 367) எனக் காண்கின்றோம். புறநானூறு "வேனிற் கோங்கு' என்றே குறிக்கின்றது. பொதுவில் வேனில் என்று குறித்தால் அது முதுவேனிலைக் குறிப்பதாகும். இவை கொண்டு இப் பூ முதுவேனிலிலும் மலரும் என்றாகின்றது. தலையலராக இளவேனிலிற் பூத்துத் தொடர்ந்து முதுவேனிலில் பூக்கும். இவ்வாறுசில ஒரு பாட்டம் இளவேனிலிலும் சில பாட்டம் முதுவேனிலிலும் பூப்பதால் தனக்கென ஒரு பருவத்தைக் கொள்ளாது

  • பருவம் இல் கோங்கம்" - என நப்பண்ணனார் பாட நேர்ந்தது. இதற்கு உரை கண்ட பரிமேலழகரும்,

'காலங் குறியாது பூக்கும் கோங்கு'- என்றார். இவ்வாற்றான், கோட்டுப் பூவாகிய கோங்கு, மஞ்சள் நிறத்ததாக, பாலை நிலத்தாக, இரு வேனிற் பருவத்ததாக மலரும் பூவாகும். இம்மலர் இலக்கியப் பாங்கில் சுடர்விட்டுப் பொன்னொளி வீசுவதாகும். 'காட்டு வழியிற் காற்றடிக்கும் போது இதன் மலர் காம்பிலிருந்து கழன்று சிதறி வீழ்வது, ஒருவன் கையில் வைத்திருந்த நெருப்புச் சுடரை விட்டெறிவது போன்று தோன்றும்'2 -என்றார் சேரமான் இளவேட்டுவனார். தனி நிலையில் இவ்வாறு தோற்றும் கோங்கம் குரவத்தோடு சேர்ந்து தோன்றுவதைப் பார்த்தார் கணிமேதாவியார். குரவ மரத்துக் காயைக் குழவியாகவும் பாவையாகவும் புலவர் பாடினர். "குரவம் பாவை’ என்ற தொடர் செய்யுள் வழக்கு. இவ்வழக்கையும் உளத்துக் கொண்ட அவர் கோங்க மரத்தைத் செவிலித் தாயாகக் காண்கின்றார். அதன் முகை தாயின் பால் நிறைந்த மார்பக மாகப் படுகின்றது. அம்மலரை அண்டிக் குரவங்காய் தொங்கு கின்றது. இக்காட்சியைக் கற்பனையில் வடித்துள்ளார்: "தான்தாயாக் கோங்கம் தளர்ந்து முலைகொடுப்ப ஈன்றாய் நீ பாவை இருங்குரவே” - என்ற இப்பாட்டு 1 ւյք : 19 : 79 8 திணை : நூற் : 65 : 1, 2 2 அகம் : 1.58 : 16-18.