பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/478

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
458


மரங்களிலும் ஈன்ற தாயையும், பாலூட்டும் செவிலித் தாயையும் கற்பிக்கின்றது. - குரவம் பாவையால் தாயான கோங்கைக் கொங்கு வேளிர் அப்பாவைக்குப் பொன் அணிகலமாக்கினார். இவர்காணும் குரவம் பாவை பூப்போலும் அழகிய கண்ணையுடைய பாவை. அதனைக் கொய்து குழந்தையாகத் தாலாட்டிய மகளிர், அப் 'பூங்கன் பாவைக்குப் பொற்கலம் இவையெனத் தேங் கண் சாரல் திருந்து சினை மலர்ந்த கோங்கந் தட்டம் வாங்கினர் வைத் தனர். கோங்க மலரின் இதழ்கள் அகலமான தட்டையுருவில் உள் ளமையால் கோங்கந் தட்டம்’ என்றார். வடமோதங்கிழார் என்னும் புலவர் குரவ மலரோடு கோங் கைக் கண்டார். குரவ மலர்வெண்மையானது. அதன் மகரங்களும் வெண்மையானவை. இந்த வெண்மை இதழை வெள்ளியாக் கினார். கோங்கந் தட்டத்தை ஒரு பொன் தட்டாக்கினார். அத் தட்டையும் துலாக்கோலின் தட்டாக்கினார். 'இசைக்கும் வண்டினம் குரவ மலரில் ஊதிக் கிண்டு கின்றது. அதனால் அதன் வெண்மையான இதழ்கள் உதிர் கின்றன. கீழே விரிந்துள்ள கோங்க மலரில் விழுகின்றன இக்காட்சியில் கோங்க மலர் 'பொன்செய் கன்னம் (துலாத்தட்டு) பொலிய, வெள்ளி நுண்கோல் (சிறுசம்பி) அரைகுறைந் துதிர்வன போல” இருந்ததாம். சீத்தலைச் சாத்தனார் பார்வையில், நயமான கற் பனை எழுந்தது. கோங்க மலர் விரிந்துள்ளது. அதன் அண்டை யில் கிளிமூக்கு மாங்கனி ஒன்று மலரில் பட்டுப் பட்டு அசைகின் றது. அதையொட்டிக் கிளையில் தோகைமயில் அமர்ந்துள்ளது. இவற்றை, - 'செம்பொன் தட்டில் தீம்பால் ஏந்திப் பைங்கிளி (க்கு) ஊட்டுமோர் பாவையாம்'8 1 பெருங் : 2 : 14:23.25, 8 மணி : 19 : 68, 89, 2 அகம் : 317 : 8, 9