பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/479

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
459


-என்றார். கோங்கமலர் செம்பொன்னாலாகிய தட்டு; மாங்கனி பைங்கிளி; தோகை மயில் தீம்பால் ஊட்டும் பாவை. நயமான பொருத்தம் மிளிர்கின்றது, கோங்க மலர், தான் பொன் தட்டாக நின்று குரவத்தின் வெள்ளியை ஏற்றதன்றோ? அது தன் தாதைப் பொன்துள்ளாகக் கொண்டது. பூதப்பாண்டியன் இப் பொன்தாதைப் பார்த்தான் மலரிலிருந்து உதிர்கின்றது. கீழே இலவ மலர் செக்கக் செவேலென மேல் நோக்கி மலர்ந்துள்ளது. இது பவளக் கிண்ணமாயிற்று. இக்கிண்ணத்தில் பொன்துாள் நிறைகின்றது. அதனையும் விலைகூறி இளவேனில் என்னும் விற்பவர் வருகின் றார். இதனை, 'இனச்சிதர் உகுத்த இலவத்து ஆங்கண் சினைப்பூங் கே கங்கின் நுண்தாது, பகர்நர் (இளவேனில்) பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன' -என்றாம் இவ்வாறெல்லாம் எங்கு நோக்கினும், எவர் நோக்கினும் கோங்க மலர் பொன் தொடர்புடனே ஒளிவிடுகின்றது. மஞ்சள் நிறத்தால் பொன்னான இம்மலர், பொற்கிழியாய் அவிழ்ந்து, பொற்குடையாய் விரிந்து, பொன்னணியாய் விளங்கி, பொன் திருகுப் பூவாய்த் துலங்கி, பொன் துலாத்தட்டாய் நின்று, செம்பொன் தட்டாக மிளிர்ந்து, பொன் தூளாய்ப் பொலியக் காண்கிறோம். இப்பொன் தூளை ஏற்ற பவளக் கிண்ணமாக இலவம் இதனோடு இணைந்தது. இக்கற்பனை வகையில் மட்டுமன்றி கோங்கமும் இலவமும் இயற்கையில் இலக்கியத்தில் இணைந்த நண்பர்கள், கோங்கு மலரும்போது அதன் இலைகள் உதிர்ந்துவிடும். அறவே இலைகள் இல்லாத கிளையில் மெல்லிய முகைகள் தோன்றி 1 அகம் : 25 ; 9–11