பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


வெண்மைவண்ணமும் கொண்ட பூக்களை இணைத்துச் செயற்க்ை முறையின் கலப்பின அந்தி மல்லிகையைக் கண்டார். கலப்பினப் பூவின் முதல் தலைமுறை, சிவப்பு வண்ணமாகவே பூத்தது. அடுத்த தலைமுறைப் பூ வெண்மையாகவும், அடுத்து இளஞ்சிவப் பாகவும் பூத்தன. இதனால் கண்ட முடிவைக்கொண்டு மக்கள் உயிர் இனத்தின் தலைமுறை, கொடிவழிப் பண்புகளை வரையறுக் கும் கோட்பாடு தோன்றியது. இக்கோட்பாட்டைப் பின்னர் தோன்றிய அறிவியல் அறிஞர் பலரும் ஏற்றனர். இவரது ஆய்வின் முடிவுகளால்தான் பூக்களுக்குப் பெய ரிடும் முறை எழுந்தது. இவரே பூப்பெயர்களின் தந்தை எனலாம். உயிரியியலில் மூத்த பிளினி முதல் மாண்டலே வரை கண்டறிந்து நிலைநாட்டிய கொள்கையின் முதற்கருத்து ஒன்று உண்டு. அஃது, உயிர் இன வரலாற்றில் முதன்மையான செடி 'தன் மெய்யால் உற்று உணரும் ஒர் அறிவை உடையது' என்பது. இக்கருத்தை, 'ஒன்றறி வதுவே உற்றறி வது வே'80 -என ஒருவரியில் தொல்காப்பியர் கூறியிருப்பதை நினையாமல் விட முடியவில்லை. இக்கருத்தும் ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லப் பட்டது என்பது நயப்பைத் துண்டுகின்றது. தமிழகத்தில் அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்வழங்கிய கருத்தையே குறித்தார் என்னும் வியப்பு, நினைவால் எழுகின்றது. அதைத் தொடர்ந்தே ខ្លឹទ្វារ ಹ65 இவ்வருங் கருத்தை எத்தமிழ தனும் அறிவியல் துறையாக நெஞ்சத்தாலும் நெருங்கவில்லையே என்ற ஏக்க உணர்வும் தலை நீட்டுகின்றது. இந்த ஏக்க உணர்விலிருந்து மேலைநாட்டு அறிவியல் மனம் மீட்கின்றது. பூ இனம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டோர் தனியார் மட்டுமல்லர். நிறுவனங்கள் ஈடுபட்டன. பல்கலைக் கழகங்களில் ஒர் ஆய்வுத்துறையாகவும் ஏற்பட்டது. இந்நூற் றாண்டின் தொடக்கத்தில் பூக்கும் செடிகளைப்பற்றி ஒரு கணக்கு பதிவாகியுள்ளது. 80 தொல் பொருள் : மரபு : 27