பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/485

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
465


இக்குறிப்புடைய பொருள் கொண்டு இரண்டும், 'BOMBAX” எனப்பட்டன. இம்முறையிலேயே இவற்றின் வேறுபாட்டைக் (5#ảis (Ipsirgrfsosu#so#; “BOMBAX MALABARICUM” 5rsởrpjử, t?sởrsỡrsog; “BOMBAX PENDANDRUM” 5rs#Tg)!ử G,5ả#sỡri, பிற்காலத்தமைந்த இவ்வாங்கிலப் பெயர்களில் முன்னது MALABARICUM என மலைஞால நாட்டுக் குறி பெற்றதும். பின்னது அவ்வாறு பெறாததும் கொண்டு சங்ககால முள்ளிலவம் மலை நாட்டு மரமாகும் எனக் கொள்ளலாம். சங்க இலக்கியங்களிலும் இவ்வாறே காணலாம். பின்னது மலையில் மட்டுமன்றிப் பிற நிலங்களிலும் இடம் பெற்றது. இரண்டும் நன்றாக முற்றி மஞ்சள் நிறப் பழமாகி உள்ளே பழத்திரட்சியின்றிப் பஞ்சாக வெடிக்கும். பழமென்று காத்திருந்த கிளியை ஏமாற்றி 'இலவு காத்த கிளி'யாக்கும். முள்ளிலவம் தனது பஞ்சுச் சிறப்பால் அதன் பெயரையும் தனக்குக் கொண்டதாகும். பஞ்சைக் குறிக்கும் சொற்களில் பூளை என்பதும் ஒன்று. அதனிலும், 'இலவம் பஞ்சின் பேர் பூளையாகும்.’’ (சேந். தி.) 'நொய்யதோர் இலவம் பஞ்சு நுவன்றபேர் பூளைதானே.” (சூடா. தி : பல்பொருள் : 21 : 1) -என இலவு தனக்கே பஞ்சுப் பெயரை உரிமையாகக் கொண்டது பெரும்பாணாற்றுப்படையும் இலவின், 'பூளையம் பசுங்காய் புடைவிரித் தன்ன வரிப்புற அணில் என்றது. மலைஞாலத்தில் இந்நாளிலும் இதனைப் பூளாமரம் என்றே வழங்குகின்றனர். பஞ்சிலும் முன்னது இனிய மென்மையும் வெண்மையும் பட்டுப் போன்ற பளபளப்பும் கொண்டது. இதன் பஞ்சே பஞ்சணைக்குப் பயன்படுத்தப்பட்டது. திருத்தக்க தேவர் இதனைத் தெளிவாக்கியுள்ளார். முன்னே கண்ட, 崇 80