பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/486

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
466


'இறைச்சிப் பிளவு போன்றதும், முளைத்த நெருப்பு போன்றதுமான செம்மைப் பூக்களைக் கொண்ட முள்ளிலவின் அணில் போன்ற பசுங்காய்; அப் "பைங்காய் கான்றமென் பஞ்சி ஆர்ந்த மெல்லணை -என்று காட்டப்பட்டுள்ளது. இவையெல்லாங் கொண்டு, முற்காலத்து இலவு என்பது முள்ளுடைய அடிமரம் கொண்டது; அவ்வடிமரம் உதை சுவருடன் பருத்து நீண்டது: இலையில்லாமல் மலர்வது; பசுங்காயில் வெண்மையான விதைகளைக் கொண்டது; மென்மையான பஞ்சைக் கொண்டது; பழங்காலப் பஞ்சனைகளுக்குப் பயன்பட்டது; தன் தனித்தன்மையாகக், கருஞ்சிவப்பான மலர் கொண்டது. செஞ்செவே பூக்கும் இப் பூ தனிப் பூவாகும். தடிப்புள்ள இதன் புறவிதழ் கிண்ண அமைப்புடையது. மேலே 3 பிரிவானது. அகவிதழ் ஐந்து. சற்றுத் தடிப்பானவை. தனித்தனியே விரிந்திருக்கும். இவற்றின் செம்மையே பளிச்சிட்டுத் தோன்றும். சூலகத்தில் மகரங்கள் 60க்கு மேல் அமைந்து அவற்றின் மேற்பகுதி முடிச்சாகிப் பின் 16 அளவில் விரிந்து நிற்கும். இலைகள் யாவும் உதிர்ந்த கிளைகளில் இப்பூக்கள் வரிசை யாகப் பூத்துத் தோன்றும். ஒருகிளையில் இவ்வாறு தொடர்ந்து வரிசையாகப் பூத்திருப்பது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விளக்காகக் கார்த்திகைப் 'பெரு விழா விளக்கம் போலத்" 2

  • - தோன்றும். முகைகள் யாவும் மலர்ந்து நெடிய ஒழுங்காகத் தோன்றுவதை அவ்வையார்,

கார்த்திகை விளக்கின் விரிசையாகப் பாடினார். ,18 , 185 : அகம் 2 1701 ؛ sr, Hمج 1