பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/488

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
468


'வீழ்ந்தவைபோக எஞ்சியுள்ள சில மலர்கள் வைகறைப் போதில் வானில் தோன்றும் சில விண்மீன் களைப் போன்று காட்சியளிக்கும் -என்றும் கயமனார் வண்ணித்தார். இலவத்தின் முழு மலர் இறைச்சித் துண்டாகவும், முளைத்த நெருப்பாகவும், சுடர் விளக்காகவும், எரிந்து விழும் நெய் விழு. தாகவும், வைகறை விண்மீனாகவும் தோன்றியதைக் கண்டோம். மலரின் ஒர் இதழ் தனது தடிப்பாலும் மென்மையாலும் செம்மையாலும் மகளிரது வாய் இதழுக்கு உவமையாக இலக்கி யங்கள் பலவும் பாடின. X 'இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்' (பெரும்பாண் : 27) "இலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்ப' (சிலம்பு : 14 : 136) "இலவிதழ்ச் செவ்வாய் கானாயோ' (மணி 20 51) இவ்விதழின் மென்மையும் செம்மையும் மகளிரது அடிகட்கும் உவமையாயின. 'இல்வம் போது ஏரெழிற்றகைய சீரடிகள்’’’ என்றார் திருத்தக்கதேவர். அவ்வடிகள் செம்பஞ்சிக் குழம்பால் மேலும் செம்மை ஊட்டப்பட்டதை எண்ணிய அவரே இலவ இதழுக்கும் அரக்குச் செம்மையை ஊட்டி 'இலவம்பூ அரக்குண் டன்ன பஞ்சிமெல் அடியினாள்'8 -என்றார். மகளிரது செவ்விதழுக்கும் சீரடிக்கும் உவமையான இல விதழ் புலவரது நாவிற்கு உவமையாகிப் பெருமைகொண்டது. பெரும்புலவர் பரணர், மாந்தரம் பொறையன் கடுங்கோ என்னும் சேர மன்னனது கொடைப் பெருமையைப் பாடினார். அவனைப் புலமையில் மேம்பட்ட சான்றோர் ஏத்திப் பாடியதைக் குறித்தார். குறிக்கின்றவர், அச்சான்றோரது நாவின் நிறத்தையும் நேர்மை யையும் 'அம் செந் நா என்னும் தொடரால் குறித்தார். இதில் உள்ள செம்மை நேர்மையுடன் நாவின் நிறத்தையும் குறிப்ப தாகும். அச்செம்மை நிறத்தை, ي د. ! "இல(வ) மலர் அன்ன அஞ்செந் நாவின் புலமீக் கூறும் புரையோர் 4 1 அகம் : 17 : 18-21 3 சீவ, சி : 1881 2 சீவு, சி ; 1588 4 அகம் :142: 1, 2,