பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/489

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
469

-என இலவ மலர்ச் செம்மை கொண்டு காட்டினார். இதனால் இலவ மலர் சான்றோர் நாவிற்கு உவமையாகி மிக உயர்ந்த இடத்தைப் பெற்றதாகின்றது. இம்மலர்பற்றிய செய்திகள்-வண்ணனைகள்: "வியன் காட்டு இயவின்', 'ஆலியின் தாஅம் காடு', "மைபடு மாமலைவிலங்கிய சுரன், 'பயந்தபு கானம்' என்றெல்லாம் பாலைநிலத்தோடும், குறிஞ்சி சேர்ந்த பாலையோடும் அமைந் துள்ளன.இலவம் அமைந்த சங்கப் பாடல்கள் மிகுதியும் பாலைத் திணைப் பாடல்களாகவே உள்ளன. பெருங்கதை ஆசிரியரும் பாலை நிலப் பட்டியவிலேயே இைைவ வைத்தார். எனவே, இது பாலை நிலப் பூ. - 'தண்பத வேனில்', "தாதவிழ் வேனிலோ வந்தது’’ 'உள்ளார் கொல்லோ இலவம் மலர்ந்த இளவேனிலை” என் றெல்லாம் இலவ மலர்ச்சியின் காலம் இளவேனிலாகக் குறிக்கப் பட்டுள்ளது. இக்காலத்தும் மாசி இறுதி தொடங்கி இலைகள் உதிர்ந்து வர சித்திரை நடு அளவில் பூக்கள் தோன்றுவதும் இலவம் பூ இளவேனிற் பருவப் பூ எனக் காட்டுகின்றது. இளவேனிற் காலத்தில் இதன் மலரைக் காக்கை மைனா முதலிய பறவைகள் இரையாக உண்னும். இலவ மலரின் நிறைவாக அது பெற்றுள்ள பெயர்களைக் காணவேண்டும். இலவ மரத்தைப் பஞ்சு மரம் என்பது நாட்டுவழக்கு. இங்கு நிகண்டுகள் வகுக்கும் பெயர்களைக் காண வேண்டும். சேந்தன் திவாகரம் “பொங்கர்” என்னும் மறுபெயரைமட்டும் குறித்தது, பிங்கலமும் சூடாமணியும் இப்பொங்க கடன் சான்மவி', பங்கலழு கு え ரு "பூரணி 2 என்னும் இருபெயர்களைக் குறித்துள்ளன த 'பொங்கர் என்பது பலபொருள் ஒரு சொல். சோலை என்னும் பொருள் இவ்வொரு மரத்திற்கு மட்டும் பொருந்தாது. மரக்கொம்பு என்றொரு பொருள் உண்டு. இலவத்தின் கிளைகள் 1 சே, தி : மரப்பெயர், 2. பிங் : 271) 2 சூடா, தி : மரப் : 29 : ,ே