பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


உலகில் பூக்கும் செடியினம் 1, 96, 000. இவற்றுள் சாமந்திக் குடும்பச் சூரியகாந்தியில் மட்டும் 13, 000 எண்ணுக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவ்வெண்ணிக்கை முன்னே கண்ட கூட்டுமொத்த எண்ணிக்கையில் பதினைந்தில் ஒரு பங்காகும். எண்ணிக்கை அளவில் இச்சூரியகாந்தி இனம் மேம்பட்டிருந்தாலும் மேலைநாட்டார் அறிவையும் உள்ளத்தையும் சூழ்ந்து கமழ்வன, ROSE. JASMINE, LOTUS, LILLY. -எனப்படும் உரோசா, மல்லிகை, தாமரை, அல்லி என்னும் பூக்களேயாகும். மலர்களின் அரசி உரோசாவே எனக் கிரேக்க, உரோமக் கவிஞர்கள் பலரும் போற்றியுள்ளனர். இஃது ஒரு காட்டு மலர். செடியில் பூப்பது, கருஞ்சிவப்பு, அரக்குச் சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெண்மை எனப்பலவண்ணங்களில் மலரும். இருப்பினும் இளஞ்சிவப்பே இதற்குரிய இயற்கை வண்ணம். பிற பூக்களின் வண்ணங்களைக் குறிக்க வண்ணச் சொற்கள் உள்ளன. ஆனால் இதன் பெயர் உலகில் ஒரு ROSE - உரோசு- என்னும் வண்ணச் சொல்லை உருவாக்கியிருத்தலே இதன் பெருமையை விளக்கு கின்றது. இந் நிறம் ஒரு பெருமை என்றாலும், இது வழங்கும் மெல்லிய மனமே இதன் தனிச் சிறப்பாகும்.













'இரிச்சேர்டு' என்னும் ஆங்கிலேயக் கவிஞன், "உரோசாவை மோந்தாள் குழந்தை ‘ஓ’ என்றே வியந்தாள்: ‘'எனக்கே உராதிலே என்னே அந்தோ உடையதோ ஒரே ஒரு முக்கே" -என இதன் மணச்சிறப்பை ஒர் அரும்புள்ளத்திலிருந்து வடித்துப் பாடினான். குழந்தைகளைக் கவர்ந்த நமது நேரு பெருமகனாரைக் கவர்ந்த மலர் இது. . . அடுத்து நாம் முல்லை, மல்லிகை, மெளவல் என வழங்கும் இனத்தை மேல் நாட்டார் ஒலிவக் குடும்பம் என்பர் அக்குடும்பத்தைச் சேர்ந்தது செசுமின்-JASMINE-மலர். இது பெரும்பாலும் வெண்மை நிறத்திலும் சிறுபான்மை பிற நிறங்களிலும் பூக்கும். உள்ளத்தைக் கெல்லும் இனிய மணம்