பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/491

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
471


பாவை மலர்.

குரவம்.

கோங்க மரத்துடன் சேர்த்துப் பேசப்படுவது குரவம், பேச்சில் மட்டுமன்றி அதற்கண்டையில் வளரும் தொடர்பு கொண் டது. மலர், காய் முதலியவற்றினாலும் தொடர்பு கொள்வது. இது குரா, குரவு, குரவம் எனும் பெயர் வளர்ச்சிகொண் டது. இதன் மலரைப் பொறுத்த அளவில் ஒரு குழப்பத்தைத் தீர்த்தல் முதற்கருத்தாகின்றது. இம்மரத்தின் காய் பாவை’ எனப் படும். இக்காயின் அமைப்பு கைகால் இல்லாத சிறு குழந்தை வடிவில் தலைப்பகுதி போன்று மேலும், உடற்பகுதி போன்று அடியும் அமைந்திருக்கும். இதனால் இதனைக் குழவி' என்றும் கூறினர். செய்யாப்பாவை என்றனர். ஐங்குறுநூற்றில், "நறும் பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை கொய்யும் பொழுதே' ! -என்னும் பகுதிக்கு உரை எழுதிய அதன் பழைய உரைகாரர் கொய்யும்’ என்னும் சொல் கொண்டு 'பாவை’ என்பதற்குப் 'பூ' என்று எழுதினார். மேல் அடியில் "நறும் பூங்குரவம்" என்பது பூவைக் குறிக்கும். கீழுள்ள பாவை காயைக் குறிக்கும். இவ்வாறிருக்க அவ்வுரைகாரர் பூவைப் பாவை என்று எழுதியதால் குராவின் பூதான் பாவை எனப் பிற் காலத்தவர் சிலர் எழுதினர். இது தவறானதே. எனவே குரவம் பூ தணி. அதன் காய்தான் பாவை எனப்படும். இதனைப் பின்னர் வரும் கருத்துகளாலும் உணரலாம். குரவம் கோங்கொடு வளரும் மரம் என்று குறித்தோம். இதன் அடிமரம் 'குறுநிலைக் குரவு” என்றபடி குட்டையானது. ஆனால் கிளைகள் குரவம் நீள் சினை" என்றபடி நீண்டு வளர்பவை. குரவத்து ஓங்குசினை' என்றபடி உயர்ந்தோங்கி வளர்பவை. தலைவியே! நீ வண்டலம் பாவை செய்து விளையாடு வதற்கு உரிய குரவ மரத்து நீழல் உள்ளது என்று தலைவன் குறித்தான். இதுகொண்டு அதன் நிழல், மரத்தின் தழைச் செறி வைக் காட்டுகின்றது. எனவே. இதிற் பூக்கும் குரவ மலர் கோட்டுப் பூவாகும். 1 ஐங் : 344 4 அகம் : 817 : 14, 12 2. தற் 56 : 1. 5 திணை. நூ : 70 : 1. 8 ஐங் 869 : 4. -