பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

473


"குறுங்காற் குரவின் குவியினர் வான்பூ' -என இதன் பல இதழ்களை இணராகக் குறித்து இப்பூவின் அமைப்பு குவிவானது என்பதையும் குவியினர்' என்பதாற் காட்டினார். இவ்வடியில் இப்பூவைப் பற்றிய மற்றைய இரண்டு கருத்துகள் உள. ஒன்று இதன் காம்பு குறுகியது என்பது. இதனைத் திருத்தக்க தேவரும், 'குறுந்தாள் குரவின் குவிமுகை' -என்றார். மற்றொன்று இப்பூவின் நிறம் பற்றியது. வான்பூ' என்றபடி இது வெண்மை நிறப் பூ. இதன் இதழ்கள் உதிர்வதற்கு, "... ... ... ... ... ... வெள்ளி நுண்கோல் அறைகுறைத் துதிர்வன போல்’’8 ー5丁意3丁 வெள்ளிக்கம்பி உவமையாக்கப்பட்டிருப்பது கொண்டும் இதன் வெண்மையை அறியலாம். - இப்பூவின் முழு உருவ அமைப்பில் இது 'குறுமலர்'4 தான். திருத்தக்க தேவரும் இதன் காம்பையும் சேர்த்துக் குறும் பூழ்ப் பறவையின் காலை உவமையாக்கினார். இவ்வாறு குவிந்த குறுமலர்கள் பல பூப்பதை, - - "பல் வி பட்ட பசுநனைக் குரவம் 6 -என்றார் மிளைகிழான் நல்வேட்டனார். இலக்கியங்களில் இதன் பூவைவிடக் காய்தான் நயம்படப் பாடப்பட்டுள்ளது. மகளிர் இக்காயைப் பாகையாக-பொம்மை யாகக்கொண்டு தொட்டிலிவிட்டுத் தாலாட்டி விளையாடுவர். இக் காயிலிருந்து சங்குத் தூள்போல் உதிர்வதை முன்னரும் கண்டோம். இக்காய் பருவ காலத்தில் சாம்பல் நிறத்தில் கிளை களில் ஆங்காங்கு தொங்கிஅசைவது காட்சிக்கு இனிமை பயக்கும். சிறு குழந்தைப்பொம்மை தொங்கி ஆடுவதுபோன்றிருக்கும். இக்காய் கரணியமாக இம்மரமே குரவம் பாவை என்ற பெயரை யும் பெற்றது. இலக்கியத்தில் பல்லிடங்களில் இம்மரம் குரவம் பாவை’ என்றே குறிக்கப்படும். 1 தற் : 236 : 2 4 பெருங். நர : 2 : 17, 18 2 . பெருங் மகத 1 : 192 5 சீ, சி ; ; 831 8 அகம் : 817 9 19, 6 குறு : 341