பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

475


6. முத்து மலர்.

புன்னை,

"புன்னையொடு ஞாழல் பூக்கும்’1 -என அம்மூவனார் ஐங்குறுநூற்றில் இரண்டிடங்களிலும், குறுந்தொகையில் ஒரிடத் திலும் பாடியுள்ளார். இவர் போன்று புன்னையையும் ஞாழலையும் இணைத்துக் கடுவன்மள்ளனார் முதலிய புலவர்களும் ஆங்காங்கே பாடியுளர். புன்னையொடு தாழையை இணைத்து, 'மன்றப் புன்னை மாக்கிளை நறுவி முன்றில் தாழையொடு கமழும்"2 என நெய்தல் தத்தனாரும் மற்றும் கீரங்கீரனார்,சாத்தனார், இளங்கோவடிகளார் முதலிய பல புலவர்களும் பாடியுளர். புன்னையொடு ஞாழலையும் தாழையையும் கூட்டி, 'தெரியினர் ஞாழலும் தேங்கமழ் புன்னையும் புரியவிழ் பூவின் கைதையும்? -என நல்லந்துவனாரும் மற்றும் கருவூர்க் கண்ணம்பாளனார், கணிமேதையார் முதலிய புலவர்களும் பாடியுளர், இவ்வாறு இரண்டும் மூன்றும் பாடப்படும் இடங்களி லெல்லாம்,'கானல்’, பெருங்கடற்கரை','பெருமனல்’, 'துறைவன்’ சேர்ப்பன்' என்னும் நெய்தல் நிலச்சொற்கள் இடம் பெற்றுள்ளன இவை மூன்றையும் நெய்தல் நிலத்திற் கண்டு உவந்த புலவர் பெருமக்கள் பாடிக் களித்தனர். அவர்தம் பாடல்களில் அவ்வ வற்றின் தன்மைகளும் எழிலும் பயனும் சில செடியியற் கருத்துக் களும் தெரிவிக்கப்படுகின்றன. இவை மூன்றும் நெய்தல் நிலத்தவையாயினும் - கடல் மணற்பாங்கில் வளர்வனவாயினும் புன்னை கடற்கரையோரத் திலும் உள்ளிடங்களிலும் வளர்வதாகும். 1 ஐங் ; 108 : 1. 3 கவி : 1.27 : 1, 2 2 நற் : 49 : 8