பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478


"இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை; நிலத்து அன்ன பாசிலை; அகந்தோறும் வெள்ளி அன்ன விளங்கினர்; நாப்பண் பொன்னின் அன்ன நறுந்தாது உதிரும்" 1 - என்று வண்ணித்தார். இஃதொரு புன்னையின் வரலாற்றுச் சுருக்கப் பாடல். இரும்புச் சரட்டில், பச்சைமரகத மணியாலான இலைத் தொழிலில், வெள்ளி மணிக்கொத்துகள் பொன் துரளொடு நான்மணிக்கடிகையாயிற்று. பரஞ்சோதி முனிவர் பார்வையிலும் இந் நோக்கு முளைத்தது: 'மரகதம் தழைத்து, வெண் முத் தரும்பிப் பொன்மலர்ந்து வாங்கும் திரைகடற் பவளக் காடு செய்வன கன்னிப் புன்னை" 2 -என இலைகளை மரகதங்களாய்க் கண்டார். அரும்புகளை முத்துக் களாகப் பார்த்தார். தாதுத்துளைப் பொன்னாக நோக்கினார். இவற்றைக் கண்ட திரைகடல் பவளத்தை வழங்க வைத்ததாகக் கற்பித்தார். புன்னையின் இலை கரும்பச்சை நிறத்தது. கரும்பச்சையை நீலமாகச் சொல்லல் மரபு. அதனால் பல்லிடங்களிலும் நீலமாக 'நீலத் தன்ன பாசிலை’ எனப்பட்டது. இலைகள் தழைத்த மரம் தொலைத் தோற்றத்திற்கு ஒரே நீலமாகத் தோன்றும். இதனால், மரத்தையே நீல் நிறப்புன்னை' (நற் : 4 : 2 : 163 : 8) என்றனர் அம்மூவனாரும் மற்றொருவரும். இதன் இலை தடிப்பானது. நீள்வட்ட வடிவினது. மேற் புறம் நல்ல வழவழப்பும் பளபளப்பான ஒளியும் உடையது. கதிரவன் ஒளியில் மின்னல் போல் இதன் பளபளப்பு பளிச் சிடுவதால், - "மின் இலைப் பொலிந்த" (அகம் : 80 : 11) "மின் இலைப் புன்னை” (குறு 5 ; 2) - -எனப்பட்டது. இவ்விலையின் 1 நற் 249 : 1.4. 2 திருவிளை தருமி : 18 : 3, .