பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

479


வடிவத்தையும் நிறத்தையும் ஒளிவிடுதலையும் கண்ட பாவேந்தர் பாரதிதாசனார் சிறு குழந்தைகளது காலில் அணியும் தற்காலப் புதுமைச் செருப்பாகக் கண்டார். குடும்ப விளக்காம் ஒரு தாய், "புன்னை இலையோல் புதையடிச் செருப்புகள் சின்னவர் காலில் செருக' -வைத்துப் பாடினார். புன்னையின் எழிற்பெருமையை அதன் அழகுப் பூக்களே சேர்த்தன. இதன் அரும்பு வெண்மை நிறமுடையது. உருண்டை வடிவினது. நிறத்தாலும் வடிவாலும், "முத்தம் அரும்பும் முடத்தர்ள் முது புன்னை' - என்று முத்தாகக் கூறப்பட்டது. இவ்வாறு முத்தை உவமையாகவும், 'தெடுங்கால் புன்னை நித்திலம் (முத்து) பூப்பவும்'3 -என உருவகமாகவும் கூறினர். நிறத்தாலும் வடிவாலும் முத்தைப் போன்றதாயினும் முத்துப்போன்ற நல்வெண்மை கொண்ட தன்று. சற்று மங்கிய வெண்மை. இதனையும் கருத்திற்கொண்டு, கழுவித் துய்மை செய்யாத முத்து என, 'மண்ணா முத்தம் அரும்பிய புன்னை'சி ー伝言「5丁 நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனும், "மண்ணாப் பசுமுத்து ஏய்ப்பக் குவியினர் புன்னை அரும்பிய" -என இளந்திரையனார் என்னும் சோழ 10ಣಿr6Tir பெயர்கொண்டவரும் பாடினர். புன்னை அரும்பு -முத்து உவமைத் தொடர்பில் சுவையான பாடல்கள் உருவாயின. ‘பூம்புகார் நகரின் கடற்கரை, ஒரு சிறுமி மணல்வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு பேரலை வந்து மணல் வீட்டை மூழ்கடித்துப் போயிற்று. அலைகள் வேண்டு மென்றே தன் வீட்டைக் குலைத்ததாகக் கருதினாள் அறியாச் சிறுமி. அலறிப்புடைத்துக் கொண்டு ஓடினாள். ஓடுகின்றவள் ‘கடலே என் தாயிடம் சொல்கிறேன் பார்’ என்று ஒலமிட்டுக் கொண்டே ஓடினாள். ஒடிய விரைவில் கழுத்திற்கிடந்து 1 குடும்ப விளக்கு : பக்கம் 16, 4 அகம் : 30 : 18. 2 திணை. ஐ : 50. 5 நற் : 94 : 5, 6 8 சிறுபான் : 59 .