பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


இதன் உயிர்ப்பு எனலாம். உலகெங்கும் பரவியுள்ள இதில் தென்னமெரிக்காவில் மட்டும் 200 இனங்கள் உள. சூன் அக்டோபர் திங்கள்களில் பூத்துக் குலுங்கி அந்நாட்டையும், மக்களையும் கமழ வைக்கின்றது. அடுத்த, தாமரை அனைத்துலக மலர். மலர்களில் பெரியது; அதிக இதழ்களையுடையது. நிறத்தாலும் ஒரளவு மணத்தாலும் சிறந்தது. எகிப்து நாட்டார் இதனை நீர் அல்லி’ என்று வழங்கு கின்றனர். இது நீர்ப் பூ என்றாலும் தாமரை மரமும் உண்டு. உரோமில் இம்மரப் பூவால் உண்டாகும் பழம் முதலில் சிவப்பாகத் தோன்றிப் பின்னர் கருப்பாக மாறக்கூடியது. இப்பழம் உணவாகப் பயன்படுகின்றது. இஃதும் அறிவியல் ஆய்வில் இடம்பெற்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக இப் பூ ஒரு தெய்வப் பூ என்னும் தகுதிபெற்றது. மேலைநாட்டிலும் இவ்வுணர்வு உண்டு. 'இறை உணர்வோடு இறந்தோர் மீண்டும் கடவுள் உலகில் உள்ள தாமரைப் பூவில்பிறப்பர்’ என்பது எகிப்து நாட்டார் நம்பிக்கை. 'இலில்லி (Lily என்னும் அல்லி மலரும் உலக மலர். கிறித்துவ மா மறையான விவிலிய நூலில் விரல் விட்டெண்ணக் கூடிய அளவில் பூக்களின் பெயர்களைக் காணலாம். அவற்றில் இந்த அல்லிப் பூ சில இடங்களில் சிறப்பாகக் குறிக்கப் படுகின்றது. உலக இலக்கியங்கள் பலவற்றிலும் உவமையாகவும் எழில் வண்ணனையாகவும் அல்லி சிறப்பிக்கப்படுகின்றது. எகிப்து, சீன நாட்டுச் சிற்பங்களில் இப்பூ எழிலுடன் செதுக்கப்பட்டுள்ளது. இதில் 40 இனங்கள் உள்ளன என்று அறிவியலார் கணக்கிட்டுள்ளனர். நீர்ப்பூவாகிய இது ஒடை, ஏரி, குளம், கேணிகளில் மலர்வது. குவிந்தும் விரிந்தும் 7 நாள்கள் அளவில் பூத்திருக்கும். அங்கேரி நாட்டில் இப்பூ ஒரு வியப்பான பூவாகும். அந்நாட்டில் வெந்நீர் ஊற்றுகள் உண்டு. அவ் வெந்நீர் ஊற்றுகளில் இப்பூ பூத்து அழகை வழங்குவது ஒரு வியப்பாகும். இதனை வியப்போடு விடாமல் அறிவியலார் ஆய்வுக்குள் செலுத் தினர். இதனால் புதிய கோட்பாடுகள் உருவாயின. மேலே குறிக்கப்பட்டவை போன்ற மலர்களும் பிறமலர்களும் அறிவியல் உலகில் ஆராயப்பட்டன; ஆராயப்படுகின்றன.