பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/504

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
484


இரும்புபோன்று கரிய நிறத்தவை; இலைகள் கரும்பச்சையில் வழவழப்பும் மெருகும் உடையவை, அரும்பு முத்தைப்போன்று வெண்மையும் உருட்சியும் கொண்டது; பல்லிமுட்டை நெறிக்கப்பட்டது போன்று மலர்வது. * } பொன் நிறத் தாதை நிறையக் கொண்டது; காய்கள் பசுமையாக உருண்ட வடிவத்தவை; எண்ணெய் வழங்குபவை -என அமைகின்றது. புன்னை இலக்கியங்களில் மட்டுமன்றிப் பயனிலும் அகத் திணையில் இடம் பெற்றது; புறத்திணையிலும் இடம் பெற்றது. அகத்திணையில் புன்னை மரம் புணர்ச்சிக்குரிய இடமாக அமைந்தது. களவுப் புணர்ச்சியின் புணர்ச்சிக் களமாக அமைந் ததைப் பல இலக்கியங்கள் ஆங்காங்கு குறித்துள்ளவற்றை முறைப் படுத்திக் காணலாம்: - புன்னை நன்கு தழைத்துக் கிளைகள் மணலோடு தாழ்ந்து சூழ்ந்திருக்கும். இதனால் உள்ளிடம் இருள் திணிந்து களவுப் புணர்ச்சிக்குத் தக்கதாயிற்று. கடலாடச் சென்ற கோவலனும் மாதவியும் கடற்கரையில் தாழை சூழ்ந்த வேலியிடையே புகுந்தனர். அவ்வேலிக்குள் புன்னை மர நிழலில் புதுமணற்பரப்பில்தான் களிப்படைய முனைந்து பூசல் நேர்ந்து, கானல் வரி பிறந்தது. புன்னையைப் புணர்ச்சிக் களமாகக் குறிக்கும்போது நயம் மிக்க ஒரு பாடற் சுவையை வழங்கித்தான் நிறைவு செய்ய வேண்டும். ஒரு பரதவ இனத்துக் குமரன். நேற்று அக்குப்பத்துச் குமரியுடன் கூடிக் களித்தவன். இன்றும் வந்துள்ளான். இ-" மாறி நிற்கின்றான். அஃதும் புன்னை மரப் பொதும்பர்தான். ஆனால், தழைத்து நிற்கும் இளைய மரம். குமரி தோழில்" அனுப்புகின்றாள். எத்துணை நாள் இந்தக் களவையே நீட்டி" பது? திருமண எண்ணத்தை அவன்பால் எழுப்ப வேண் டாமா? அதற்கு இன்று அவனை மறுப்பது ஒரு வழி அதனை எவ்வாறு மறுப்பது? அவன் நின்ற புன்னையையே வாய்ப்பாக்கிக் கொண்டு தோழி பேசுகின்றாள்: