பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486


அம்ம! நானுதும் தும்மொடு நகையே விருந்தின் பாணர் விளரிசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலும், இலங்குநீர்த் துறைகெழு கொண்க! நீ நல்கின் திரைபடு நீழல் பிறவுமார் உளவே -நயம் சுரக்கும் இப்பாடலைச் சுரந்தவரை அறியோம். இப்பாடல் இலக்கிய நயத்திற்கு நற்றிணையின் ஒரு நற்றுனை. 17 இவ்வாறு அகத்திணையில் இன்பியல் நாடகத்திற்கு இடத் தந்தது புன்னை. புறத்தினையிலோ துன்பியல் நிகழ்ச்சி இடம் பெற்றது. அந்நிகழ்ச்சி உண்மை நிகழ்ச்சி; ஒரு வரலாற்று நிகழ்ச்சி; அவ்வரலாற்றையும் அகத்திணையின் தொடர்பிலேயே காண்கின்றோம். அகத்திணை நூல்களாகிய அகநானூறும் நற்றிணையுமே வழங்குகின்றன. எனவே புன்னை அகத்தினைத் தொடர்புடனே புறத்திணை யில் புகுகின்றது. மற்றொரு வகையிலும் வரலாற்றில் அகப்பொருள் வாழ்வின் தொடர்பும் கொண்டதாகும். அதனைப் பின்னே காணலாம். - - நக்கீரர், கயமனார், வெள்ளி வீதியார், எவரோ ஒருவர் ஆகியோரது பாடல்களைக் கொண்டு ஒரு வரலாற்றை வகுக்க முடிகின்றது. அஃது இது: குறுக்கை என்றொரு நகரம். அதனை இருப்பிடமாகக் கொண்டு பெரிய திதியன் என்னும் குறுநில மன்னன் ஆண் டான். அவன் புன்னை மரத்தைத் தனது காவல் மரமாகக் கொண்டான். திதியனோடு அன்னி என்னும் குறுநில மன்னன் பகை கொண்டான். பெரிய தி தி யன து காவல் மரமாம் புன்னையை வெட்டி வீழ்த்தி அவனை அவலப் படுத்த விருப்பங்கொண்டான். அன்னியின் அரிய நண்பன் எவ்வி என்பான், திதியனுடன் போரிட வேண்டாம் அவனது புன்னையை வீழ்த்த வேண்டாம் என்று நயமாக மொழிந்தான்; நன்மொழிகளால் தடுத்தான். அன்னி எவ்வி யின் சொற்கேளாது குறுக்கையைத் தாக்கினான். காவல் மரமாம் புன்னையை வெட்டி வீழ்த்தினான். அதனைக் கண்ட அன்னியைச் சேர்ந்த பாணர் இசை முழக்கி ஆரவாரம் செய்தனர். - -. 1 நற் : 172