பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/507

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
487


தனது காவல் மரம் வீழ்த்தப்பட்டதைப் பொறாத பெரிய திதியன் முனைப்போடு போரிட்டு அன்னியை வீழ்த்தினான். இவ்வரலாற்றில் புன்னை மரம் பெரிய திதியனின் காவல் மரமாக அமைந்து ஒரு பெருமை பெறுகின்றது. ஆயினும் அன்னியால் வீழ்த்தப்பட்டு அவலம் எய்தியது. துன்பியல் நிகழ்ச் சிக்கு ஆளாகியது. இவ்வவலத்தைக் கயமனார், 'தொன்னிலை முழு முதல் துமியப் பண்ணிய நன்னர் மெல்லினர்ப் புன்னை போலக் - கடுநவை” -என்று காட்டினார். அவலம் எய்தும் புன்னை தன்னால் அன்னி அவலம் எய்தவும் கரணியமாக நின்றது. அன்னி அவலம் எய்தியதை நக்கீரர், "பொன்னினர் நறுமலர்ப் புன்னை வெஃகித் திதியனொடு பொருத அன்னி போல விளி குவை”2 -என்று காட்டினார். இவ்வாறு பெயர்பெற்ற புன்னைபற்றிய பெயர்களாக நிகண்டுகள் புன்னாகம்', ‘நாகம் இரண்டைக் குறிக்கின்றன. சூட்ாமணி நிகண்டு ஒன்று மட்டும் நாகம்’ என்னும் பெயரைக் குறித்துள்ளது, நாகம் பெருமரம், குறிஞ்சிநில மரம். எனவே, இது பொருந்துவதன்று. மற்றையப் புன்னாகம்’ என்பதும் நாக மரததின் இனமானது. புன்னை என்னும் அடைமொழி நாகத்தின் இனத்தைக் குறிப்பதே யாகும். புன்னாகம் என்னும் சொல்லைச் சங்க இலக்கியங்களில் பரிபாடல் ஒன்றில் மட்டும் காண் கின்றோம். அப்பரிபாடலும், - - 'ே 'வரையன புன்னாகமும்’-என மலையிடத்து மலராகக் குறிக்கின்றது. எனவே, புன்னாகம் வேறு, புன்னை வேறு. நிகண்டுகள் வழங்கும் குழப்பங்களில் இஃதும் ஒன்று. - . ஆனால் முத்தொள்ளாயிர ஆசிரியர், 'புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை நன்னாகம் நின்றலரும் நன்னாடன்' என்று பாடி ,17 ,15: 128 அகம் 2 12-14 : 145 : فهي 1.