பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488


யுள்ளமை புன்னாகம் புன்னையோ என்று ஐயங்கொள்ள வைக்கின்றது. இவ்வடிகளில் 'புனல் தெங்கு" என்பது தாழை யைக் குறிக்கும். தாழையுடன் சேர்த்துக் கூறப்பட்டதால் புன்னை என்று கொள்ளலாம் எனினும் பரிபாடல் கூறியது போன்று உறுதிப்பாடு கொள்தற்கில்லை. இவ்வாறு கருத்தெழுந்ததற்குக் கரணியம் புன்னையும் தாழையும் இணைத்துப் பேசப்படுவனவாகும். பேச்சில் மட்டு மன்று. வளர்ச்சியிலும் இரண்டும் அடுத்தடுத்துப் பின்னிப் பிணைந்து, 'முடத்தாள் புன்னையும் மடற்பூந் தாழையும் வெயில்வரவு ஒழித்த பயில்பூம் பந்தர்' - இட்டு விளங்கும். எனவே, புன்னையைத் தொடர்ந்து தாழை கவனத்தை ஈர்ப்பது. 7. மடல் மலர் தாழை தாழையைக் குறிக்கும் பெயர்களை ஆய்வது தாழையின் கருத்திற்கும் துணையாகும்; காலப்போக்கில் சொல்லாட்சியின் வளர்ச்சிக்கும் திரிபிற்கும் அறிமுகம் ஆகும். தாழையைக் குறிக்கும் சொற்களாக ஒன்பது சொற்கள் உள்ளன. நிகண்டுகளும் இலக்கியங்களும் இவற்றைக் காட்டு கின்றன. அச்சொற்களை, அவை எழுந்த கால வளர்ச்சி கருதி யும், இலக்கிய ஆட்சி கருதியும் ஒரு வரிசைபடுத்திக் காட்டலாம். அவ்வரிசையுடன் அச்சொற்களின் இலக்கிய வழக்கையும் உலக வழக்கையும் பொருத்திக் காண்பது இவ்வரிசைக்கு ஒரு விளக்க மாகவும் அமையும். - 1. தாழை அனைத்துக்கால இலக்கியப் பெயர்: உலக வழக்குப் பெயர். 2. கைதை : அனைத்துக்கால இலக்கியப் பெயர்; உலக வழக்கில் அருகிய பெயர். 3. கைதகை : சங்க இலக்கியத்தில் இல்லை.