பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/509

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
489


4. கண்டல் : பத்துப்பாட்டில் இல்லை. 3. முண்டகம் : ஐந்திணை எழுபது தொடக்கமாக ஆட்சி. 6. முடங்கல் : சிலப்பதிகாரம் தொடக்கமாக ஆட்சி. 7. மடி : நிகண்டுப் பெயர்; செய்யுள் வழக் கில்லை. 8. முசவி : நிகண்டுப் பெயர்; செய்யுள் வழக் கில்லை. 9. தெங்கு : தென்னையின் தொடர்பில் இலக்கிய ஆட்சி. இவற்றுள் தெங்கு என்பது தென்னைக்குரிய பெயர். தென்னைக்குரிய பெயர்களை அறிவிக்கும் நிகண்டுகள் தாழை என்னும் சொல்லையும் அறிவித்துள்ளன. இலக்கியங்களிலும், "தாழை இளநீர் விழுக்குலை' (திருமுருகு : 307) தென்னைப் பெயராகத் தாழை இடம் பெற்றுள்ளது. குறிஞ்சிப் பாட்டில் 80ஆவது அடியில் தாழை என்னும் சொல்லும் 83ஆவது அடியில் கைதை என்னும் சொல்லும் உள. பின்னருள்ள கைதையைத் தாழம்பூவாகக் கொண்டார் நச்சர். ஆனால் முன்னுள்ள தாழைக்குத் தெங்கிற் பாளை' எனத் தென்னையாகப் பொருள் எழுதினார். தென்னையும் தாழையும் புறக்காழன என்னும் வகையில் ஓரினமாகும்; புல்லினமாகும். அடிப்பகுதி, சருச்சரை, தாள், குருத்து, காயின் வடிவமைப்பு முதலியவற்றாலும் ஒரளவாக ஒற்றுமை உடையவை. ஆயினும் தாழைக்கு விழுது உண்டு: தென்னைக்கு இல்லை. தாழை, "வீழ்த் தாட்டாழை' (நற்றிணை : 78 : 4) 'விழ்த் தாழை (பட்டினப்பாலை : 84) 'வீழ்த் தாழை (குறுந்தொகை : 228 : 1) என்றெல்லாம் விழுதுடன் குறிக்கப்பட்டது. தென்னையோ, - 'விழ் இலி தாழைக் குழவித் தீநீர்” (பெரும்பாண் : 57) -என வீழ் இலி' என்னும் அடைமொழியுடன் குறிக்கப்பட்டது. இவ்விழுது வேறுபாடு போன்றே மேலும் தென்னையின் ஒலை ம்ட்டைகள் கீழ்நோக்கித் தாழ்ந்து தொங்கி வளர்வதால், தாழ் தாழை தண்டலைய' (பொருநர் : 181) எனத் தாழ் தாழை’ எனப்பட்டது. இவ்வாறு வீழ்தாழை தாழ்தாழை என்னும்