பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/513

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
493


கண்டல் என்னும் பெயர் தாழைக்குப் பெரும்பகுதி உரிய தாகும், இச்சொல் தாழையைக் குறிக்கும் குறிப்புப்பொருளோடு அமைந்த இடங்கள் பல. தாழையில் அடிப்புறம் வளைந்துள்ளது. அதன் நிறம் ஒரளவான நீல மணி நிறம் போன்றது. இதனை குறிக்கும் சேந்தங் கண்ணனார் பாடல், - "தெண்டிரை மணிப்புறம் தைவரும் கண்டல வேலிதும் துறைகிழ வோர்க்கே" - என்று 'கண்டல்' என்னும் பெயரில் தாழையைக் குறிக்கிறது. இவ்வடி களில் கடல் அலைகள் தடவும் அடிப்புறம் என்றுள்ளமையும் நினைக்கத்தக்கது. நாலடியாரும், "கண்டல் திரையலைக்குக் கானல்" என்றார். தாழையின் பசிய பெருங்காய் கழன்று கழிநீரில் விழுவதை குறிக்கும் நம்பி குட்டுவனார் என்பார், - 'கானல் கண்டல் கழன்று கு பைங்காய் நீல் நிற இருங்கழி உட்பட விழ்ந்தென'3 - எனக் கண்டல் பெயரில் பாடினார். தாழையில் தாதுத் தூள் நிறைய உண்டு. அதனை உதிர்த்து ஒருவர் மேல் ஒருவர் தூவி மண மேற்றி விளையாடுவர். கடல் அலையில் தூவி விளையாடுவர். இதனைக் குறிக்கும் பரிபாடல், 'கண்டல் தண் தாது திரைதுரை துரவாரும்’4 - எனக் கண்டல் பெயரில் பாடியது. எனவே கண்டல் தாழைக்குரிய பெயரில் ஒன்றாகின்றது. ஆனால் தாழைக்கு மட்டும் உரியது அன்று. கண்டல்’ என்னும் சொல் முள்' என்னும் பொருள் தொடர்பில் உள்ளது. கண்டகம்' என்னும் சொல் இதன் மறு உருவம். 'கண்டகம் முள்ளே கடுவும் ஆகும்" - எ ன் னும் பிங்கலத்தின்படி இது முள்ளைக் குறிப்பது. முள்ளின் சிறப்பால் பெயர்பெற்ற முள்ளிக்கும் கண்டகம்' என்ற பெயர் உண்டு என்பதைச் சூடாமணி நிகண்டு, 1 நl : 54 10, 11. 4 tյի : 101 - 2 நாலடி : 194 : 8, 5 ເ?ພໍ່ : . : 28 54. 3 நற் : 846 : , 2.